இந்திய சுதந்திரம் பற்றி சொல்லப்படாத கதை... கெளதம் கார்த்தியின் ‘ஆகஸ்ட் 16, 1947’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published : Mar 03, 2023, 03:46 PM IST
இந்திய சுதந்திரம் பற்றி சொல்லப்படாத கதை... கெளதம் கார்த்தியின் ‘ஆகஸ்ட் 16, 1947’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சுருக்கம்

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கெளதம் கார்த்தி நடித்துள்ள ‘ஆகஸ்ட் 16, 1947’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.  

இந்திய சுதந்திரத்தின் அதிர்ச்சியூட்டும் மற்றும் சொல்லப்படாத கதையை, மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படத்தை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்துள்ளார். ‘ஆகஸ்ட் 16, 1947’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின், ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வ போஸ்டருடன் வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘ஆகஸ்ட் 16, 1947’ ஏப்ரல் 7, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரபரப்பான காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த படத்தில்,  நடிகர் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார், அறிமுக நாயகி ரேவதி கதாநாயகியாக நடித்துள்ளார். நகைச்சுவை, போராட்டம், காதல் என அனைத்தும் கலந்த அம்சங்களுடன் இப்படம் தயாராகியுள்ளது.

ரம்யா பாண்டியனுக்கு ஏர்போர்டில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி..! எதிர்பாராமல் நிகழ்ந்த பிரபலத்தின் சந்திப்பு!

போஸ்டரை பார்க்கும் போதே இப்படம் நம்மை சுதந்திரம் அடைந்த 1947 காலகட்டங்களுக்கு அழைத்து செல்லும் என்பது தெரிகிறது.  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகும் ‘ஆகஸ்ட் 16, 1947’ வெறும் திரைப்படம் மட்டுமல்ல... சுதந்திரத்தை பற்றி நாம் பலரும் அறிந்திடாத தகவல்களை தெரியவைக்க வரும் பொக்கிஷம் என படக்குழு தெரிவித்துள்ளது.

பர்பிள் புல் என்டர்டெயின்மென்ட் வழங்கும், “ஆகஸ்ட் 16, 1947”, படத்தை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி, ஆதித்யா ஜோஷி இணைந்து தயாரித்துள்ளனர். என்.எஸ்.பொன்குமார் இப்படத்தை இயக்கி உள்ளார். நம் நாட்டின் சுதந்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

உறுப்பு மாற்று செய்யப்பட்ட பிரபல நடிகர் அதிர்ச்சி மரணம்! திரையுலகில் பரபரப்பு!

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!