ஹரீஷ் கல்யாண் - அட்டக்கத்தி தினேஷ் இணையும் ‘லப்பர் பந்து’ - வெளியானது அசத்தல் அப்டேட்

Published : Mar 03, 2023, 03:08 PM IST
ஹரீஷ் கல்யாண் - அட்டக்கத்தி தினேஷ் இணையும் ‘லப்பர் பந்து’ - வெளியானது அசத்தல் அப்டேட்

சுருக்கம்

புதுமுக இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘லப்பர் பந்து’ என பெயரிட்டுள்ளனர்

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் ஹரீஷ் கல்யாண். இவர் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது டீசல், தோனி தயாரிக்கும் லெட்ஸ் கெட் மேரிடு ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், தற்போது மேலும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் ஹரீஷ் கல்யாண். அப்படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘லப்பர் பந்து’ என பெயரிட்டுள்ளனர். இதில் அட்டக்கத்தி தினேஷும் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை தமிழரசன் பச்சைமுத்து என்கிற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றியவர் ஆவார்.

இதையும் படியுங்கள்... தலைவன் வந்துட்டாண்டா... லெஜண்ட் படத்துக்கு ஓடிடியில் இவ்வளவு டிமாண்டா..! அதகளப்படுத்தும் அண்ணாச்சி ரசிகர்கள்

லப்பர் பந்து திரைப்படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்க உள்ளார். இவர் கடந்த ஆண்டு ரிலீசாகி வெற்றிபெற்ற வதந்தி என்கிற வெப் தொடரில் வெலோனி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். கார்த்தியின் சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது.

லப்பர் பந்து திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு மதன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ள நிலையில், தற்போது டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதைப்பார்க்கும் போது இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ள படம் என்று தெரிகிறது.

இதையும் படியுங்கள்... ஜெய்பீம்ல வர்ற மாதிரி தான் என்னையும் அடிச்சாங்க... மு.க.ஸ்டாலின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய சூர்யா படம்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்