
தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால், தனது கடை விளம்பரங்களில் நடித்து வந்தார். அதில் அவர் ஹன்சிகா, தமன்னா என டாப் ஹீரோயின்களுடன் ஜோடி சேந்து ஆடுவதை பார்த்து டாப் ஹீரோக்களே பொறாமைப்பட்டனர். விளம்பரம் மூலமே அந்த அளவுக்கு பேமஸ் ஆன லெஜண்ட் சரவணன் கடந்த ஆண்டு சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். அந்த வகையில் தமிழில் அவர் நடித்த முதல் திரைப்படம் தி லெஜண்ட்.
இப்படத்தில் ஹீரோவாக நடித்து மட்டுமின்றி தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்தும் இருந்தார் சரவணன் அருள். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்திருந்தார். மேலும் நடிகை ராய் லட்சுமியும் இப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் அண்ணாச்சி உடன் குத்தாட்டம் போட்டிருந்தார். இப்படி பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருந்த இப்படம் கடந்தாண்டு ஜூலை மாதம் ரிலீஸ் ஆனது.
இதையும் படியுங்கள்... பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு ஆஸ்கர் குழு அளித்துள்ள மாபெரும் அங்கீகாரம்... குவியும் வாழ்த்துக்கள்
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆன தி லெஜண்ட் படத்தை டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக ரிலீஸ் செய்து இருந்தனர். அதிகாலை 4 மணிக் காட்சியெல்லாம் திரையிடப்பட்டன. இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை அள்ளியதாக அண்ணாச்சியே அறிக்கை மூலம் அறிவித்தார். அதுமட்டுமின்றி இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
பல மாதங்கள் ஆகியும் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் இருந்த லெஜண்ட் சரவணன் நேற்று மாலை திடீரென ஒரு ஷாக்கிங் அப்டேட் கொடுத்தார். அதன்படி லெஜண்ட் திரைப்படம் இன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த இப்படம் இன்று மதியம் 12.30 மணியளவில் ரிலீஸ் ஆனதை அடுத்து, இப்படத்தை ரசிகர்கள் ஆவலோடு பார்த்து தங்களது கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... 7 ஹீரோயின்களை பாடாய்படுத்திய பிரபுதேவா... ரசிகர்களை மகிழ்வித்தாரா? - பஹீரா படத்தின் விமர்சனம் இதோ
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.