SK25 படத்தில் ஏன் நடிக்க ஒத்துக் கொண்டேன் தெரியுமா? காரணத்தை சொன்ன அதர்வா!

By Rsiva kumar  |  First Published Dec 29, 2024, 10:32 AM IST

Atharva says Sudha Kongara is the reason for acting in SK25 Movie : SK25 படத்தில் நடிக்க என்ன காரணம் என்பது குறித்து நடிகர் அதர்வா ஓபனாக பேசியுள்ளார்.


Atharva says Sudha Kongara is the reason for acting in SK25 Movie : அமரன் படம் கொடுத்த சூப்பர் டூப்பர் வரவேற்புக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து ஜாக்பாட் அடிக்க ஆரம்பித்துவிட்டது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி முன்னணி ரோலில் நடித்து வெளியான படம் அமரன். மறைந்த தமிழக வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி வெளியான இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாக வாழ்ந்திருந்தார்.

முழுக்க முழுக்க இராணுவ கதையை மையப்படுத்தி வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.335 கோடி வரையில் வசூல் குவித்தது. சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமரன் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி அவரது படங்களில் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்த படம் என்ற சாதனையை அமரன் பெற்றுக் கொடுத்தது.

Tap to resize

Latest Videos

விஜய் வந்தா நான் ஏன் எழுந்து நிற்கணும்; பல வருட சர்ச்சைக்கு பாலா அளித்த பளீச் பதில்

இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தன்னுடைய 24ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ருக்மினி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜூ மேனன், விக்ராந்த், ஷபீர் கல்லரக்கல், சஞ்சய், சாச்சனா நாமிதாஸ் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படம் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாகி வருகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தன்னுடைய 25ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. இதில், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோர் பலர் நடிக்கின்றனர். SK25 என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

பணப்பெட்டி மிஸ் ஆனா என்ன; ஜெஃப்ரிக்கு பிக் பாஸ் வாரி வழங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில் தான் இந்தப் படத்தில் இணைந்தது குறித்து நடிகர் அதர்வா கூறியிருக்கிறார். அதில், பரதேசி படத்திலிருந்து சுதா கொங்கராவை தெரியும். நாங்கள் இருவரும் ரொம்ப குளோஸ் ஃப்ரண்ட். மறுபடியும் சேர்ந்து படம் பண்ணுவோம் என்று சொல்லியிருந்தார். அதற்காக இந்த படத்தில் படம் பண்ணலாம் என்று சொன்னாங்க. அதோடு, இந்த படத்தில் இணைந்த எல்லோருமே தெரிந்தவர்கள் தான் என்று கூறியுள்ளார். Dawn Pictures and Red Giant Movies நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன.

அதர்வா நடிப்பில் இப்போது வரையில் வெளியான எந்தப் படமும் ஹிட் கொடுக்கவில்லை. அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தக் கூடிய கதைக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்படி ஒரு கதையை எஸ்கே25 படம் கொடுக்கும் என்று தெரிகிறது. பானா காத்தாடி படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான அதர்வாவிற்கு பரதேசி சிறப்பான படமாக அமைந்தது. நயன்தாரா நடிப்பில் வந்த இமைக்கா நொடிகள் படமும் நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்தது.

ஐஸ்வர்யா ராய் சல்மான் கானின் வாழ்க்கையை அழித்தாரா? சோஹைல் கான் பகிர்ந்த தகவல்!

தற்போது அதர்வா நடிப்பில் Address, Thana and SK25 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 2025 ஆம் ஆண்டு அதர்வாவிற்கு சிறப்பான வருடமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று தான் நடிகர் ஜெயம் ரவிக்கும், 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு சிறப்பான வருடமாக அமையும் என்று தெரிகிறது. 2024 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வந்த பிரதர்ஸ் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அமரன் படத்தின் மூலமாக இந்தப் படத்தின் மூலமாக பிரதர்ஸ் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. இப்போது சிவகார்த்திகேயன் உடன் இணைந்து எஸ்கே25 படத்தில் நடிக்கிறார்.

2025 ஆம் ஆண்டில் ஜெயம் ரவி  நடிப்பில் உருவான ஜெனி, காதலிக்க நேரமில்லை, ஜேஆர்34 மற்றும் எஸ்கே 25 படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!