எல்லாமே செஞ்சது ஒரு இந்தியன்... ஆக்ஷனில் பொறி பறக்க விடும் ஆர்யா - விஷாலின் எனிமி ட்ரைலர்..!

Published : Oct 23, 2021, 06:16 PM IST
எல்லாமே செஞ்சது ஒரு இந்தியன்... ஆக்ஷனில் பொறி பறக்க விடும் ஆர்யா - விஷாலின் எனிமி ட்ரைலர்..!

சுருக்கம்

ஆர்யா (Arya)  - விஷால் (vishal) இருவரும் 'அவன் இவன்' படத்திற்கு பின் ஒன்றாக இணைந்து  நடித்துள்ள 'எனிமி ' (enemy)திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ள நிலையில், இந்த படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.  

ஆர்யா - விஷால் இருவரும் 'அவன் இவன்' படத்திற்கு பின் ஒன்றாக இணைந்து  நடித்துள்ள 'எனிமி ' திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ள நிலையில், இந்த படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, ஆர்யாவின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் பெரிதாக பாராட்டப்பட்டது. இதனையடுத்து ஆர்யா நடிப்பில் இந்த மாதம் வெளியான அரண்மனை 3 படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில். எனிமி படத்தின் ரிலீசுக்கு தன்னுடைய நண்பரோடு சேர்ந்து தயாராகியுள்ளார் ஆர்யா.

மேலும் செய்திகள்: 20 வயது யங் ஹீரோயின் போல்... விதவிதமான மாடர்ன் உடையில் லண்டனை சுற்றி வரும் குஷ்பு..! ரீசென்ட் போட்டோஸ்..!

 

தன்னுடைய உயிர் நண்பரான விஷாலுடன் ஆர்யா இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'எனிமி'. இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர்  இயக்கி வருகிறார். நடிகை மிருணாளினி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை வினோத் தயாரிக்கிறார். மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் பலர் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: குட்டை டவுசரில் குதூகல கிளாமர்... வயசுக்கு மீறிய உடையில் அட்ராசிட்டி பண்ணும் அனிகா! ரொம்ப ஓவராதான் போறாங்களோ..

 

மிகப்பெரிய பட்ஜெட், விஷால் - ஆர்யா மீண்டும் ஒன்றிணைவது போன்ற விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் 'எனிமி' படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஆன்மீக பயணத்தில் மூழ்கிய சமந்தா..! வைரலாகும் புகைப்படங்கள்..!

 

சிறு வயதில் இருந்தே போலீஸ் அதிகாரியாக தயாராகும் குழந்தைகள் இருவரில், விஷால் எப்படி போலீஸ் அதிகாரியாக மாறுகிறார், என்ன காரணத்திற்காக ஆர்யா வில்லனாக மாறும் சூழல் உருவாகிறது என்பதை வித்தியாசமான காணோட்டதோடு, அதிரடி ஆக்ஷன் காட்சிகளோடு திரைப்படமாகியுள்ளார் இயக்குனர். ட்ரைலரை பார்க்கும் போதே... அடுத்து என்ன நடக்கும் என்ற சுவாரஸ்யம் எழுகிறது. எனவே ஆர்யாவின் அடுத்த ஹிட் பட்டியலில் இணைவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வெளியாகியுள்ள 'எனிமி' படத்தின் ட்ரைலர் இதோ...

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Sara Arjun : விக்ரமின் ரீல் மகளா இது? அடேங்கப்பா! கவர்ச்சி உடையில் என்னமா போஸ் கொடுக்குறாங்க..
Shivani Narayanan : எல்லாமே அப்படியே தெரியுது! சேலையில் கிளாமர் காட்டும் ஷிவானி நாராயணன் கிளிக்ஸ்