தனிமைப்படுத்தி கொண்ட அருண்விஜய்..கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றுமொரு பிரபலம்..

Kanmani P   | Asianet News
Published : Jan 05, 2022, 03:55 PM ISTUpdated : Jan 05, 2022, 03:56 PM IST
தனிமைப்படுத்தி கொண்ட அருண்விஜய்..கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றுமொரு பிரபலம்..

சுருக்கம்

 தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வீட்டு தனிமையில் இருப்பதாகவும் ட்வீட்டர் பக்கத்தில் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

விஜயகுமாருக்கும் முதல் மனைவிக்கும் பிறந்தவர் அருண் விஜய், தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவருக்கு அனிதா, கவிதா என்ற இரண்டு சகோதரிகளும் உள்ளனர். சோசியல் மீடியால் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் அருண் விஜய் எந்த ஒரு விசேஷம் என்றாலும் அது குறித்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்வது வழக்கம்.

இவர் தற்போது  ‘ஓ மை டாக்’ மற்றும் ஹரி இயக்கத்தில் யானை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  இதில்  டிசம்பர் மாதம் அருண் விஜய் நடித்துள்ள ‘ஓ மை டாக்’ என்கிற படம் வெளியாகும் என அறிவித்திருந்தனர். இப்படத்தில் அருண் விஜய்யின் மகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் அப்படம் திட்டமிட்டபடி வெளியிடப்பட வில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

இப்படம் தாமதம் ஆவதற்கு இப்படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தான் காரணம் என கூறப்படுகிறது. அவர் இசைப்பணிகளை முடிக்காததால் இப்படம் தாமதமாகி வருகிறதாம். இதனால் இப்படத்தை அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வீட்டு தனிமையில் இருப்பதாகவும் ட்வீட்டர் பக்கத்தில் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பட்டு வேஷ்டி சட்டையில் மணமக்களை வாழ்த்திய தளபதி விஜய் – தயாரிப்பாளர் சிவா இல்ல திருமண நிகழ்ச்சியின் சுவாரஸ்யம்!
ஆக்‌ஷனில் இறங்கிய பாண்டியன்: போதுமுடா சாமி…பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வார புரோமோ வீடியோ!