
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தனது அதிரடி நடிப்பாலும், மாஸ் டைலாக்குகளாலாலும் ரசிகர்களை தன் வைத்துள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே அங்கு உண்டு.
இவரின் லெஜண்ட் மற்றும் சிம்ஹா வெற்றிக்கு பிறகு இயக்குனர் போயபதி ஸ்ரீனு மற்றும் நடிகர் பாலகிருஷ்ணா ஆகியோர் மூன்றாவது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள படம் அகண்டா. மாஸ் மசாலா படமாக உருவாகியுள்ள திரைப்படமான இதில் நடிகர் பால கிருஷ்ணா இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பிரக்யா ஜெய்ஸ்வால் ஐஏஎஸ் அதிகாரி கதாபாத்திரத்திலும், ஜெகபதி பாபு அகோரியாவும் நடித்துள்ளார். இவர்களுடன் நந்தமுரி பாலகிருஷ்ணா, அவினாஷ் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அகண்டா படம் கடந்த டிசம்பர் 2-ம் தேதி வெளியாகி மாஸ் வெற்றி பெற்று வருகிறது. இதை தொடர்ந்து நந்தா பாலகிருஷ்ணா தனது 107 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ஏற்கனவே ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதாகவும், தமன் இசையமைக்கவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் NBK107 இயக்குனர் Gopichandh Malineni இந்த படத்தில் வரலட்சுமியும் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.