என்ன கொடுமை இது..படம் தள்ளிப்போனால் வட்டி தரணுமா?.. ஓடிடி தளங்கள் குறித்து குமுறும் பிரபல இயக்குனர்..

Kanmani P   | Asianet News
Published : Jan 05, 2022, 02:25 PM IST
என்ன கொடுமை இது..படம் தள்ளிப்போனால் வட்டி தரணுமா?.. ஓடிடி தளங்கள் குறித்து குமுறும் பிரபல இயக்குனர்..

சுருக்கம்

சில காரணங்களால் பட வெளியீடு தள்ளி போனால் கொடுத்த அட்வான்ஸிற்கு ஓடிடி நிறுவனங்கள் வட்டி வசூலிப்பதாக சீனுராமசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

கொரோனா அச்சத்தால் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த துவங்கிய ஓடிடி தளங்கள் பிரபலங்கள் பலரின் படங்களையும் அதிகவிலை கொடுத்து வாங்க துவங்கின. இதற்கு முன்னமே சேரன், சூர்யா,ஜோதிகா உள்ளிட்ட பிரபலங்களின் படங்கள் ஓடிடியில் வெளியாகி இருந்தன. அப்போது  இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் வேறு வழியே இல்லாமல் தயாரிப்பு நிறுவங்கள் ஓடிடியை நாடத்துவங்கியுள்ளனர். ஊரடங்கு தளர்வுகளால் திரையரங்குகள் திறக்கப்பட்ட போதிலும் பிரபலங்களின் படங்கள் பெரும்பாலும் வலைதளத்தில் தான் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் ஓடிடி தளங்கள் குறித்து பகிர் குற்றசாட்டை முன் வைத்துள்ளார் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி. சமீபத்தில் ஓடிடி குறித்து பேசியிருந்த சீனுராமசாமி; திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஓடிடியில் வெளியாவது தொடர்கிறது. இதற்காக பட தயாரிப்பாளர்களுக்கு ஓடிடி நிறுவனங்கள் அட்வான்ஸ் தருகின்றன. ஆனால் சில காரணங்களால் பட வெளியீடு தள்ளி போனால் கொடுத்த அட்வான்ஸிற்கு ஓடிடி நிறுவனங்கள் வட்டி வசூலிப்பதாக குற்றம்சாட்டியுள்ள சீனுராமசாமி,  தயாரிப்பாளர்கள் வளர்ந்தால் தான் ஓடிடி நிறுவனங்களுக்கும் பெருமை என அவர் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!
கதறி அழும் விசாலாட்சி; ஆறுதல் சொல்லும் மருமகள்; குணசேகரின் கேம் இஸ் ஓவர் என்று பேசும் ஜனனி: எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்!