Vanangaan Teaser: பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது?

Published : Feb 16, 2024, 07:57 PM ISTUpdated : Feb 16, 2024, 07:58 PM IST
Vanangaan Teaser: பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது?

சுருக்கம்

இயக்குனர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' படத்தின் டீசர், ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.  

இயக்குனர் பாலா, நடிகர் சூர்யாவை வைத்து முதலில் இயக்க இருந்த திரைப்படம் 'வணங்கான்'. பிரமாண்டமாக பூஜை போடப்பட்டு சூர்யாவை வைத்து, படப்பிடிப்பு துவங்கிய சில தினங்களிலேயே, படத்தை விட்டு விலகுவதாக... நடிகர் சூர்யா அறிக்கை விட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில்,  இதைத்தொடர்ந்து இயக்குனர் பாலாவும், சூர்யா இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு பொருந்தாத காரணத்தால், இப்படத்தில் இருந்து சூர்யா விளங்குவதாகவும் , விரைவில் வேறு ஒரு நடிகரை வைத்து படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தெரிவிக்கப்பட்டது.

அப்போ இது பயோ பிக் தானா? முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் சிவகார்த்திகேயன் - யார் இந்த மேஜர் முகுந்த் வரதராஜன்?

பின்னர் இயக்குனர் பாலா, நடிகர் அருண் விஜய்யை வைத்து மீண்டும் வணங்கான் படத்தை இயக்க துவங்கினார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் என்பவர் நடிக்க, மிஸ்கின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

Star Movie Making Song Out: கவின் நடித்துள்ள 'ஸ்டார்' படத்தின் மேக்கிங் பாடல் வெளியானது!

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தை,  சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி, திருவண்ணாமலை, போன்ற பகுதிகளை சுற்றி எடுக்கப்பட்ட நிலையில்... கடந்த ஆண்டு படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் துவங்கியது. மேலும் 'வணங்கான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட்டை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி வணங்கான் படத்தின் டீசர் பிப்ரவரி 19ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என் வாழ்க்கையை அழிக்க இவர்கள் ரெண்டு பேர் போதும்: மர்ம முடிச்சைப் போட்ட மயில்; யார் அந்த ரெண்டு பேர்?
யாரோட சொத்த யார் ஆட்டைய போடுறது: ஓ நீ தான் அந்த அர டிக்கெட்டா? அப்பத்தா எண்ட்ரியால் அனல்பறக்கும் எதிர்நீச்சல்!