தொடர் வெற்றி.. வசூல் சாதனை படைக்கும் மணிகண்டன் - அடுத்து கைகோர்ப்பது யாருடன் தெரியுமா? மாஸ் அப்டேட் இதோ!

By Ansgar R  |  First Published Feb 16, 2024, 7:26 PM IST

Manikandan Next Movie : பிரபல நடிகர் மணிகண்டன் ஏற்கனவே குட் என்ற வெற்றியை ருசித்த நிலையில், அவருடைய Lover படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.


திரைக்கதை ஆசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் தமிழ் திரையுலகில் தனது தடத்தை பதிக்க துவங்கிய கலைஞர் தான் மணிகண்டன். கடந்த 2017 ஆம் ஆண்டு புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் வெளியான "விக்ரம் வேதா" திரைப்படத்தில் வசனம் எழுதியதற்காக இவருக்கு சிறந்த வசனகர்த்தாவிற்கான விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு இடையில் பல திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்த மணிகண்டன் கடந்த 2018 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "காலா" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்று நடத்து புகழ் பெற்றார். அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு வெளியான "ஜெய் பீம்" திரைப்படம், மணிகண்டனின் திறமையை இந்திய சினிமாவிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. 

Tap to resize

Latest Videos

undefined

அப்போ இது பயோ பிக் தானா? முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் சிவகார்த்திகேயன் - யார் இந்த மேஜர் முகுந்த் வரதராஜன்?

தற்பொழுது குட் நைட் மற்றும் லவ்வர் என்று இரு வெற்றி திரைப்படங்களை ஒரு ஹீரோவாக கொடுத்துள்ள மணிகண்டன் அவர்கள் மீண்டும் ஒரு மெகா ஹிட் இயக்குனரோடு இணையவிருக்கிறார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. "தங்கலான்" திரைப்படத்தை இயக்கி முடித்து அதனுடைய வெளியீட்டுக்காக காத்திருக்கும் ரஞ்சித் அவர்கள் இயக்க உள்ள அடுத்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக மணிகண்டன் அவர்கள் நடிக்க உள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மணிகண்டன் அவர்கள் வெள்ளித்திரைக்கு செல்வதற்கு முன்பே, சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் மிமிகிரி கலைஞராக பல மேடைகளை கண்டுள்ளார். இப்பொது தமிழ் சினிமாவில் உதயமாகி வரும் முன்னணி நடிகராக அவர் மாறியுள்ளார்.  

Star Movie Making Song Out: கவின் நடித்துள்ள 'ஸ்டார்' படத்தின் மேக்கிங் பாடல் வெளியானது!

click me!