விக்ரமுக்காக அமெரிக்காவில் இருந்து இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்

Published : Aug 04, 2022, 12:09 PM ISTUpdated : Aug 04, 2022, 12:12 PM IST
விக்ரமுக்காக அமெரிக்காவில் இருந்து இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்

சுருக்கம்

தற்போது அமெரிக்கா முழுவதும் கச்சேரி சுற்றுப்பயணத்தில் இருக்கும் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் கோப்ரா படத்திற்கான இசையமைப்பு குறித்த சாங் மிக்சிங் புகைப்படத்தை  சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள கோப்ரா இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இதன் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகள் படப்பிடிப்பில் இருந்த கோப்ரா விரைவில் திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். ஏ ஆர் ரகுமான் படம் குறித்த புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். தற்போது அமெரிக்கா முழுவதும் கச்சேரி சுற்றுப்பயணத்தில் இருக்கும் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் கோப்ரா படத்திற்கான இசையமைப்பு குறித்த சாங் மிக்சிங் புகைப்படத்தை  சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்...பிரியா பவானி சங்கருக்கு காதல் தோல்வியா ? உருக்கமான பதிவால் உருகிய ரசிகர்கள் !

முன்னதாக உடல் நலக் குறைவு காரணமாக பொன்னியின் செல்வன் டீசருக்கு  விக்ரம் வருகை தராத நிலையில்  கோப்ரா இசை வெளியீட்டு விழாவிற்கு நாயகன் வருவாரா என்கிற எதிர்பார்ப்பு மிகுந்திருந்தது. சிகிச்சைக்கு  பிறகு வீடு திரும்பிய சீயான் கோப்ரா விழாவிற்கு திடீர் விசிட் கொடுத்து ரசிகர்களை குதூகலப்படுத்தியிருந்தார். இந்த  ஆடியோ வெளியீட்டு விழா கடந்த ஜூலை 13ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

மேலும் செய்திகளுக்கு....Actor karthi : பல வருடங்களுக்கு பிறகு கோவிலுக்கு வந்த கார்த்தி.. விருமன் வெற்றி பெற மீனாட்சி தரிசனம்

7 ஸ்கிரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் , கே ஜி எஃப் நாயகி ஸ்ரீநிதி செட்டி, மிர்னாளினி, மலையாள நடிகர் லால், கனிகா, பத்மபிரியா, பாபு ஆண்டனி மற்றும் பலர்  நடித்துள்ளனர். கோப்ரா மூலம்  இர்பான் பதான் மற்றும் ஸ்ரீநிதி சக்தியை உள்ளிட்டோர் காலிவுட்டுக்கு அறிமுகமாகின்றனர்.

மேலும் செய்திகள்:  பொய் சொல்கிறாரா? விக்னேஷ் சிவன் விளக்கத்தால் சர்ச்சையில் சிக்கிய தெருக்குரல் அறிவு!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!