Actor karthi : பல வருடங்களுக்கு பிறகு கோவிலுக்கு வந்த கார்த்தி.. விருமன் வெற்றி பெற மீனாட்சி தரிசனம்

Published : Aug 04, 2022, 10:28 AM ISTUpdated : Aug 04, 2022, 10:34 AM IST
Actor karthi : பல வருடங்களுக்கு பிறகு கோவிலுக்கு வந்த கார்த்தி.. விருமன் வெற்றி பெற மீனாட்சி தரிசனம்

சுருக்கம்

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி பல வருடங்களுக்கு பிறகு கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தது மனநிம்மதியை அளிக்கிறது என்றும், ஆத்ம திருப்தி அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

நடிகர் கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன், விருமன் ஆகிய இரு படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் பொன்னியின் செல்வனில் வந்தியதேவனாக வரும் கார்த்தி சமீபத்தில் கலந்து கொண்ட ps 1 படத்தின் ஆடியோ லான்ச் மிகப்பெரிய வரவேற்புகளை பெற்றது. அதை அடுத்து முத்தையா இயக்கத்தில் இவர் நடித்துள்ள விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற இந்த விழாவில் கார்த்தி நாயகி அதிதி சங்கர், இயக்குனர் சங்கர் மற்றும் அவரது மனைவி, நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். ராஜா முத்தையா மன்றத்தில் இந்த விழா நடைபெற்றது. விழா அரங்கத்தின் வாயிலில் வீரர்களின் சிலைகள் மற்றும் தாரை தப்பட்டை பறையென தூள் கிளப்பியது நிகழ்ச்சி குழு.

முன்னதாக கொம்பன் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி, முத்தையா இணைந்துள்ள இந்த கூட்டணி பிரம்மாண்டமாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யாவின் 2டி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். பிரகாஷ்ராஜ், ராஜ்கிரன், சரண்யா பொன்வண்ணன், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு செல்வகுமார் மேற்கொள்ள படத்தொகுப்பை வெங்கட்ராஜன் செய்துள்ளார்.  இந்த படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென்று வெளியீட்டு தேதி மாற்றி வைக்கப்பட்டது. அதன்படி வரும் ஆகஸ்ட்  12ஆம் தேதி படம் வெளியாக உள்ளது என 2டி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு...actress nadhiya : இன்னும் குறையாத அழகு...மேக்கப் போடாமல் நதியாவின் நியூ லுக் போட்டோஸ்..

மேலும் செய்திகளுக்கு...வேஷ்டி சட்டையில் கெத்து காட்டிய சூர்யா - கார்த்தி..! தேவதை போல் வந்த அதிதி... 'விருமன்' ஆடியோ லான்ச் போட்டோஸ்!

இந்த படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் கஞ்சா பூ கண்ணாலே பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில்  மதுரையில் நேற்று மாலை நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர் கார்த்தி இன்று அதிகாலை ஆறு மணி அளவில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு வந்துள்ளார்.  தெற்கு கோபுரம் வழியாக சென்று அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி பல வருடங்களுக்கு பிறகு கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தது மனநிம்மதியை அளிக்கிறது என்றும், ஆத்ம திருப்தி அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்:  பொய் சொல்கிறாரா? விக்னேஷ் சிவன் விளக்கத்தால் சர்ச்சையில் சிக்கிய தெருக்குரல் அறிவு!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!