actress nadhiya : இன்னும் குறையாத அழகு...மேக்கப் போடாமல் நதியாவின் நியூ லுக் போட்டோஸ்..

Published : Aug 04, 2022, 09:59 AM ISTUpdated : Aug 04, 2022, 10:32 AM IST
actress nadhiya : இன்னும் குறையாத அழகு...மேக்கப் போடாமல் நதியாவின் நியூ லுக் போட்டோஸ்..

சுருக்கம்

actress nadhiya : துளியும் மேக்கப் இல்லாமல் அவர் ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. புகைப்படத்துடன் சன்செட்டை  தனது நண்பரின் பால்கனியில் இருந்து ரசிப்பதாக குறிப்பிட்டுள்ளார் நதியா.

80 களின் நாயகி :

80 மற்றும் 90களில்இளசுகளின் மனம் கவர்ந்த நாயகியாக இருந்த நதியா, தமிழ் மலையாளம், தெலுங்கு என பன்மொழி பிரபலமாக வலம் வந்தவர். மோகன்லால் மற்றும் பத்மினியுடன் இணைந்து நோக்கேத தூரத்து கண்ணும் நாட்டு என்னும்  படத்தில் மூலம் 1984-ல் மலையாள திரையுலகிற்கு அறிமுகமானார்.   அந்த படம் இவருக்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர்  விருதை பெற்றுக் கொடுத்தது.

அடுத்த வருடமே தமிழில் வாய்ப்பு கிடைக்க சுட்டிப்பெண்ணாக  'பூவே பூச்சூடவா' எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு 1985-ல் விஜயம் கொடுத்த நதியா பத்மினியுடன்ரசிகர்களுக்கு பிரபலமானார். இவர் நடிப்பில் வெளியான மந்திரப்புன்னகை, உயிரே உனக்காக, உனக்காகவே வாழ்கிறேன், நிலவே மலரே, பூமழை பொழிகிறது, சின்னத்தம்பி பெரியதம்பி, பாடு நிலவே, அன்புள்ள அப்பா, ராஜாதி ராஜா,  ராஜகுமாரன், சின்ன மேடம் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பு பெற்ற படங்களாக அமைந்து நதியாவின் புகழை அதிகப்படுத்தியது.

மேலும் செய்திகளுக்கு...வேஷ்டி சட்டையில் கெத்து காட்டிய சூர்யா - கார்த்தி..! தேவதை போல் வந்த அதிதி... 'விருமன்' ஆடியோ லான்ச் போட்டோஸ்!

நதியா திருமணம் : 

இதில் அன்புள்ள அப்பா படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். முன்னதாக பிளாக்பஸ்டர் படமான மௌன ராகம் படத்தில் ரேவதிக்கு பதிலாக நதியாவை தான் ஒப்பந்தம் செய்ய முடிவு செய்திருந்தாராம் மணிரத்தினம். ஆனால் சில காரணங்களால் நதியா இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் 1988 ஆம் ஆண்டு  ஷிரிஷ் காட்போல் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் வெளிநாடுகளில் தன வாழ்க்கை பயணத்தை துவங்கினார்.

நதியா ரீ என்ட்ரி : 

பின்னர் 2007 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியா திரும்பி வந்த நதியா முன்னதாக ஜெயம் ரவி நடித்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமியின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு அம்மா, மாமியார் போன்ற கேரக்டர்களுக்கு அதிகமாக தேர்வு செய்யப்பட்ட நதியா, தாமிரபரணி, சண்டை, பட்டாளம் உள்ளிட்ட படங்களில் காட்சியளித்திருந்தார்.   தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் ஒப்பந்தமாக தொடங்கிய  இவர்  சமீபத்தில் வெளியான ராம் போத்தினேனியின் தீ வாரியர் படத்தில் நாயகனுக்கு அம்மாவாக நடித்திருந்தார் நதியா. இந்த படத்த்தில் லிங்குசாமி இயக்கி இருந்தார்.

மேலும் செய்திகள்:  பொய் சொல்கிறாரா? விக்னேஷ் சிவன் விளக்கத்தால் சர்ச்சையில் சிக்கிய தெருக்குரல் அறிவு!

சமீபத்திய புகைப்படங்கள் :

இதற்கிடையே அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடும் பழக்கத்தை கொண்ட இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தில் துளியும் மேக்கப் இல்லாமல் அவர் ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. புகைப்படத்துடன் சன்செட்டை  தனது நண்பரின் பால்கனியில் இருந்து ரசிப்பதாக குறிப்பிட்டுள்ளார் நதியா.

மேலும் செய்திகள்: கத்தி பேசுறது... கட்டையை காட்டி பேசுறதுயெல்லாம் விருமனுக்கு பிடிக்காது..! பொறி பறக்கும் 'விருமன்' ட்ரைலர்!
 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!