
கார்த்தி தற்போது நடித்து முடித்துள்ள 'விருமன்' திரைப்படம், ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது. இதை தொடர்ந்து தற்போது இன்று மதுரையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவை மிக பிரமாண்டமாக நடத்தி வருகிறது படக்குழு. மதுரையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள ராஜா முத்தையா மன்றத்தின் இந்த இசை வெளியீட்டு விழா மிகப்பிரமாண்ட செட்டுகள் போடப்பட்டு நடந்து வருகிறது.
தமிழ் கலாச்சாரத்தையும், வீரம் நிறைந்த மதுரை மண்ணையும் போற்றும் வகையில், மன்றத்தின் நுழைவு வாயிலில், பிரமாண்ட மதுரை வீரன் சிலை, மற்றும் தாரை தப்பட்டை, பறை போன்ற தமிழர்களின் இசை அனைவரையும் இசை வெளியீட்டு விழாவின் வாயிலியேயே வரவேற்கிறது. கொம்பன் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி முத்தையா இயக்கத்தில் நடித்துள்ள இந்த படம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
இந்த படத்தை, சூர்யாவின் 2 டி தயாரித்துள்ளது. இதில் நாயகியாக பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள 'விருமன்' திரைப்படத்தில், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரன், சரண்யா பொன்வண்ணன், சூரி, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்திற்கான ஒளிப்பதிவை செல்வகுமார் மேற்கொள்ள படத்தொகுப்பை வெங்கட்ராஜன் செய்துள்ளார். முன்னதாக இந்த படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருந்த நிலையில், திடீர் என இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது மிக பிரமாண்டமாக நடந்து வரும், விருமான் ஆடியோ இசை வெளியீட்டு விழாவில், சூர்யா, கார்த்தி, அதிதி ஷங்கர், இயக்குனர் ஷங்கர், அவருடைய மனைவி, மற்றும் இந்த படத்தில் நடித்த அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர். அதே போல்... பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. தற்போது இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. ஆடியோ வெளியீட்டு விழா ஏற்பாடுகள் குறித்த, வீடியோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.