டோக்கியோ திரைப்பட விழாவில்... தங்கத்தை தட்டி சென்ற விஜய் சேதுபதியின் 'மாமனிதன்'! குவியும் வாழ்த்து!

By manimegalai aFirst Published Aug 3, 2022, 3:04 PM IST
Highlights

டோக்கியோ திரைப்பட விழாவில், சிறந்த ஆசிய திரைப்படம் என்கிற பிரிவில் போட்டியிட்ட, விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' திரைப்படம் தங்கம் பதக்கத்தை வென்றுள்ளது.
 

டோக்கியோ திரைப்பட விழாவில், சிறந்த ஆசிய திரைப்படம் என்கிற பிரிவில் போட்டியிட்ட, விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' திரைப்படம் தங்கம் பதக்கத்தை வென்றுள்ளது.

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் 'மாமனிதன்'. 2019 ஆம் ஆண்டே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தாமதமாகி கொண்டே சென்றது. ஒருவழியாக இப்படம், இந்த ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.

விமர்சன ரீதியாக இப்படம் பாராட்ட பட்டாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனது. விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி நடிப்பில் உருவான 'மாமனிதன்', படத்தை இந்த ஆண்டு டோக்கியோ திரைப்பட விருதுகள் விழாவிற்கு படக்குழு அனுப்பிய நிலையில், தற்போது இப்படம் தங்கப் பதக்கத்தை தட்டி சென்றுள்ளது. இந்த தகவலை  இயக்குனர் சீனு ராமசாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து, தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு நன்றிகளை கூறியுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பட குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: டல் விமர்சனமாக இருந்தாலும் வசூலில் டாப்..! சரவணன் அருளின் 'தி லெஜெண்ட்' ! 6 நாள் இத்தனை கோடியா?
 

'மாமனிதன்' திரைப்படம், ஒரு எளிய வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஒருவன், தன்னுடைய குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என தனியார் பள்ளியில் சேர்த்து கல்வி வழங்க வேண்டும் என ஏங்குவது தான் இந்த படத்தின் கரு. இதற்காக தனது வருமானத்தை அதிகரிக்க, விஜய் சேதுபதி ரியல் எஸ்டேட் நபருடன் கைகோர்க்க, அதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகளை தோலுரித்து காட்டி இருந்ததது இப்படம். இப்படம் வெளியானது முதலே தொடர்ந்து அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டை பெற்ற இப்படம் வசூல் ரீதியாக படக்குழுவினர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

மேலும் செய்திகள்: மஞ்சள் நிற லெஹங்காவில்... மிதமான கவர்ச்சி காட்டி மனம் மயக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி! லேட்டஸ்ட் போட்டோஸ்.!
 

இயக்குனர் ஷங்கர் முதல்கொண்டு, பல்வேறு பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனைத்த இந்த படம் தற்போது டோக்கியோ பட விழாவில் தங்கம் வென்று இந்த படத்திற்கு மணிமகுடமாய் அமைந்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து, வெள்ளி பதக்கத்தை 'Love Song at 5 p.m.' திரைப்படம் வெண்கல பதக்கத்தை, Nomadic Doctor' ஆகிய படங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Category ( Best Asian Film) Golden Winner

Happy to share our feature film Won Tokyo Film Awards 2022

Thanks to producer pic.twitter.com/C6YUpQw1uk

— Dr.Seenu Ramasamy (@seenuramasamy)

click me!