Anti Indian budget : அட இவ்வளவுதான் செலவா...ஆன்டி இண்டியன் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : Dec 16, 2021, 10:46 AM IST
Anti Indian budget : அட இவ்வளவுதான் செலவா...ஆன்டி இண்டியன் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

சுருக்கம்

Anti Indian budget : ஆன்டி இண்டியன் படத்திற்கான செலவும் மிகக்குறைவே இந்த கதையை படமாக்க ஒரு கோடிக்கும் குறைவான பணமே செலவாகியுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.    

பிரபல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்களை பாரபட்சம் பாராமல் கடுமையாக விமர்சிப்பவர் ப்ளூ சட்டை மாறன் என்கிற சி. இளமாறன். இவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கிய ஆன்டி இண்டியன் (Anti Indian) திரைப்படம் டிசம்பர் 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தை ஆதம் பாவா என்பவர் தயாரித்துள்ளார். மத பேதங்களால் உடைந்து கிடக்கும் சமூகம் குறித்த கதை சாராம்சத்தை கொண்டது ஆன்டி இந்தியன்.  பெரிய பில்டப்போ, டூயட்டோ இல்லமால் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஆதரவை பெற்று வருகிறது. 

வகை வரை இன்றி அனைத்து இயக்குனர்களின் படங்களையும் பங்காமாக விமரிசித்து வந்த ப்ளூ சட்டை மாறனிடம் ஒரு படத்தை இயக்கி காட்டு பாக்கலாம் என சில இயக்குனர்கள் சவால் விட்டதன் விளைவே இந்த ஆன்டி இண்டியன். படம் ரிலீஸின் போது சில எதிர்ப்புகளை படக்குழு சந்தித்த போதும் எதற்கும் அஞ்சாமல் , அதையெல்லாம் சமாளித்து ஆன்டி இண்டியன் படத்தின் தயாரிப்பாளர் ஆதம் பாவா மற்றும் இயக்குனர் ப்ளூ சட்டை மாறன் இருவரும் திரையரங்கில் வெற்றிகரமாக படத்தை திரையிட்டனர்.

ஆனால் மதங்களை விமரிசித்தன் காரணமாக அமேரிக்கா உள்ளிட்ட நாடுகளில் படத்தை திரையிட முதலில் படக்குழு தயங்கினர். பின்னர் தற்போது ரிலீசாகி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த படம் வெறும் 18 நாட்களிலேயே உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு கூறியுள்ளது. அதோடு படத்திற்கான செலவும் மிகக்குறைவே இந்த கதையை படமாக்க ஒரு கோடிக்கும் குறைவான பணமே செலவாகியுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் சேதுபதியை கலாய்த்த கானா வினோத்... காமெடி ஜட்ஜால் பிக் பாஸ் கோர்ட்டில் சிரிப்பலை..!
மாமனார் - மருமகன் மோதல்; குடும்ப சண்டையால் பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2; ஹைலைட்ஸ்!