
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் (BiggBoss 5) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில், குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார்.
வழக்கமாக போட்டியாளர்கள் தங்களுக்கு பிடிக்காத நபர்களை நாமினேட் செய்து எவிக்ஷனுக்கு அனுப்புவர். ஆனால் இந்த வாரம் டாஸ்க் வைத்து அந்த எவிக்ஷன் பிராசஸ் நடத்தப்படுகிறது. அதன்படி பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்கில் வெற்றிபெறுபவர்கள் இந்த வாரம் எவிக்ஷனில் இருந்து தப்பித்து விடுவர். இதுவரை நடைபெற்ற இரண்டு டாஸ்க்குகளில் சிபி மற்றும் நிரூப் ஆகியோர் வெற்றி பெற்று எவிக்ஷனில் இருந்து தப்பி உள்ளனர்.
இந்நிலையில், இன்று நடைபெறும் டாஸ்கில் பிரியங்கா - அக்ஷரா இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. பிரியங்காவின் பேச்சை கேட்டு கடுப்பான அக்ஷரா டாஸ்க்குக்காக கொடுக்கப்பட்ட டைஸை ஓங்கி ஒரு குத்துவிட்டு செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே சிபி உடன் ஒரு டாஸ்கில் ஏற்பட்ட மோதலின் போது வீட்டில் இருந்த சில பொருட்களை அக்ஷரா உடைத்திருந்தார். இது பிக்பாஸ் விதிக்கு எதிரானது.
தற்போது இந்த சண்டையின் போதும் அவர் அவ்வாறே செய்துள்ளதால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்படுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிக்பாஸ் விதிப்படி ரெட் கார்டு கொடுக்கப்படும் போட்டியாளர் உடனடியாக அந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.