
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை தற்போது தன்னுடைய டைமிங் காமெடியால் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருபவர் யோகிபாபு. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களாக இருந்த வடிவேலு மற்றும் சந்தானம் இருவருமே ஹீரோவாக நடிக்கத் துவங்கிய பின்பு, சிறந்த காமெடி நடிகர் என்கிற இடத்தை பிடிக்க பலர் போட்டி போட்ட நிலையில் இந்த இடத்தை நிரம்பியவர் காமெடி நடிகர் யோகி பாபு தான்.
மேலும் ரஜினி, அஜித், விஜய், என முன்னணி ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சில காமெடி படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். கடைசியாக இவர் கதையின் நாயகனாக நடித்த மண்டேலா திரைப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது பொம்மை நாயகி படத்தில் கதையின் நாயகனாக நடித்து வரும் யோகிபாபு (yogibabu), இதுதவிர மலையோரம் வீசும் காற்று, அஜித்துடன் வலிமை, விஜய்யுடன் பீஸ்ட், விஷாலுடன் வீரமே வாகை சூடும் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதில் மலையோரம் வீசும் காற்று படத்தின் படப்பிடிப்பு தேனி அருகே நடைபெற்று வந்தது. இதில் யோகிபாபு கலந்துகொண்டு நடித்து வந்தார். அப்போது அவரின் உதவியாளர் சதாம் உடைன் மற்றும் கார் டிரைவர் ராமச்சந்திரன் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஆவேசமாக திட்டி சண்டை போட்டுக்கொண்டிருந்த இவர்கள் திடீரென கைகலப்பில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து யோகி பாபுவின் கார் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.