
நடிகை சமந்தா (Samantha), தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த பின்னர் அவரது கேரியர் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. திருமண வாழ்க்கையில் சமந்தா இந்த ஆண்டு தோல்வியை சந்தித்தாலும், திரை துறையில் யாராலும் ஒளித்துவைக்க முடியாத வைரம் போல் ஜொலிக்கிறார். தெலுங்கு, தமிழ், இந்தி, என தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க கூடிய சிறந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தற்போது இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா, அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா படத்தில் இடம்பெறும் ஐட்டம் சாங்கிற்கு கவர்ச்சி நடனம் ஆடி திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
இதில் யசோதா (yashoda) திரைப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சத்துடன் தயாராகி வருகிறது. இப்படத்தை ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். தமிழ், தெலுங்கு, இப்படம் மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை வரலட்சுமி சரத்குமார் (varalakshmi sarathkumar) ஒப்பந்தமாகி உள்ளார். இப்படம் மூலம் நடிகைகள் சமந்தாவும், வரலட்சுமியும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு மணிசர்மா இசையமைக்கிறார். இப்படத்தை அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.