
ஆபாசமான உடையில், ஒரு லிப்ட்டில் இருந்து ராஷ்மிகா வெளியே வந்து பேசுவது போல், அந்த பேக் வீடியோ இருந்தது. இந்த போலியான வீடியோவுக்கு, பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் உட்பட பலர் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில், இந்த டீப் பேக் வீடியோ வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி மகளீர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகைகளுக்கும் நேரும் இந்த விஷயம் நாளை, சாதாரண பெண்களையும் பாதிக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது போன்ற உயர் தொழில்நுட்பங்களால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ள நிலையில், இது போன்ற வீடியோ வெளியிடும் நபர்கள் மீதும் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த அதிர்வலைகளைகளே இன்னும் ஓயாத நிலையில், இப்பொது இணையத்தில் ராஷ்மிக்காவை சித்தரிக்கும் மற்றொரு டீப் ஃபேக் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு வருகின்றது. இதனை கண்ட ராஷ்மிக்காவின் ரசிகர்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர். பெண்களின் பாதுகாப்பு என்பது தொடர் சிக்கலில் இருந்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
உடனடியாக இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு இதற்கு நிரந்தர தீர்வு கொண்டுவரவேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்த ஆபாச வீடியோவை வெளியிட்ட நபரை தற்போது சைபர் போலீசார் தேடி வருகின்றனர். இந்த புதிய சிக்கல் காரணமாக நடிகைகள் பலரும் இப்பொது கடும் அச்சத்தில் உள்ளனர் என்றே கூறலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.