
அதிக மதிப்பெண் எடுத்தும் கூட, மத்திய அரசின் நீட் தேர்வு நுழைப்பால் ,மருத்துவ படிப்பு படிக்க முடியாமல் போய், போராடியும் நீதி கிடைக்காமல் உயிர் விட்ட அனிதாவின் வாழ்க்கை ஏற்கனவே திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதில் அனிதாவாக பிக் பாஸ் ஜூலி நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளியாக உள்ள 'காலா' திரைப்படத்தில் அனிதா பற்றி, இந்த படத்தில் வரும் தெருவிளக்கு என்ற பாடலில் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது.
'தெருவிளக்கு வெளிச்சத்துல, நாங்க முன்னேறுவோம்...' என்று தொடங்கும் வரிகளுக்கு பின்னணியில் அனிதா படம் காட்டப்படுகிறது.
மும்பை தாராவி பகுதியில் அனிதாவின் சுவரொட்டியை ஒட்டி வைத்து 'டாக்டர் அனிதா' தமிழர்கள், நீட் தேர்வுக்கு எதிரானவர்கள்' என்று வாசகத்தை அதில் குறிப்பிட்டு உள்ளனர். மும்மை விழித்தெழு இயக்கம் என்றும் அந்த சுவரொட்டியின் கீழ் எழுதி உள்ளனர்.
நெல்லையில் இருந்து சென்று தாராவி பகுதியில் தாதாவாக மாறி அங்குள்ள தமிழ் மக்களுக்காக போராடுபவர் பற்றிய படமாக காலா இருந்தாலும் தமிழர்களை பாதிக்கும் நீட் தேர்வு உள்ளிட்ட பல சமூகபிரச்சனைகளை படத்தில் காட்சிபடுத்தி உள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.
காலா பாடலில் இடம்பெற்றுள்ள அனிதா உருவப்பட சுவரொட்டியை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இதனால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.