பிச்சைக்காரராக மாறிய பிரபல நடிகர் ...! யார் தெரியுமா..?

Asianet News Tamil  
Published : May 12, 2018, 01:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
பிச்சைக்காரராக மாறிய பிரபல நடிகர் ...! யார் தெரியுமா..?

சுருக்கம்

actor sriman turn to begger character in new movie

தெலுங்கு திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் ஸ்ரீமன், தமிழில் 1994 ஆம் ஆண்டு "புதிய மன்னர்கள்" படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகி, அஜித் நடித்த 'ராசி', விஜய் நடித்த 'லவ் டுடே' போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களால் கண்டுக்கொள்ளப்பட்ட நடிகராக மாறினார்.

இதுவரை, தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடியனாகவும், குணசித்திர வேடத்திலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீமன் பிச்சைக்காரர் வேடத்தில்,  நடித்து வரும் புதிய படத்தின் சில புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதைப்பார்த்து ரசிகர்கள் செம ஷாக் ஆகி, "ஸ்ரீமன் உங்களுக்கு என்ன ஆனது, ஏன் இப்படி? ஏதாவது பாலா படத்தில் நடிக்கிறீர்களா...? என கேள்வி எழுப்பினர். ரசிகர் ஒருவர் கேட்ட இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள, ஸ்ரீமன் "இது பாலா படம் இல்லை என தெரிவித்துள்ளார்".

என்னினும் இந்த திரைப்படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் இவர் நடித்து வருவதால் இவருக்கு இந்த திரைப்படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என கூறப்படுகிரது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எதிர்நீச்சல் 2: ஆதி குணசேகரனின் ஆட்டம் க்ளோஸ்? ஜனனியின் மாஸ் ரீ-என்ட்ரி! நிலைகுலைந்து போன ஏ.ஜி!
"பாரதி கண்ணம்மா" புகழ், ரோஷினிக்கு ரகசிய திருமணம்.! மணமகன் யார் தெரியுமா?