இறந்த நிலையில் மீட்கப்பட்ட 28 வயது பிரபலம்...! சோகத்தில் மூழ்கிய அனிருத்...!

First Published Apr 22, 2018, 4:38 PM IST
Highlights
aniruth feel for dj avicii death


இளம் வயதிலேயே இசை மீது கொண்ட ஆர்வத்தால், உலக அளவில் புகழ் பெற்ற DJ வாக வளம் வந்தவர் டிம் பெர்குலிங். சுவீடனில் பிறந்து வளர்ந்த இவர், பல்வேறு விதங்களில் தன்னுடைய இசையை பிரபலப்படுதுக்கொண்டு புகழின் உச்சிக்கு சென்றவர்.

இவரை பலரும் DJ Avicii என்று தான் அழைப்பார்கள். இந்த வார்த்தையை பயன்படுத்தி தான் இவர் தன்னுடைய DJ உள்ளிட்ட பல இசை கச்சேரிகளை நடத்தியுள்ளார்.

மேலும் இசைக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இவருடைய தீவிர ரசிகர்களில் ஒருவர் நம் கோலிவுட் இளம் இசையமைப்பாளர் அனிருத். 

இந்நிலையில் DJ Avicii கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஓமன் நாட்டில் மர்மமான முறையில் இறந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவருடைய மறைவு குறித்து அறிந்த அனிருத், DJ Avicii மரணத்தால் துக்கத்தில் மூழ்கி உள்ளதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார், அதே போல்  பாடகி சின்மயி, மற்றும் நடிகை கஸ்தூரி உள்ளிட்ட பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

28? Really?! How unfair can life be sometimes..
Shocked beyond words.. pic.twitter.com/NQV8XgTYj8

— Anirudh Ravichander (@anirudhofficial)

click me!