நயன்தாரா தற்போது நடித்து வரும் படங்கள் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போலவும் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக அமைகிறது.
அந்த வரிசையில் 'மாயா'வின் வெற்றிக்கு பின்னர் நயன்தாரா மீண்டும் நடித்துள்ள திகில் படமான 'டோரா' படத்தின் பாடல்கள் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
ஏற்கனவே இந்த படத்தின் 'எங்கே போற டோரா' மற்றும் 'வாழவிடு' ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் விரைவில் இந்த படத்திற்காக அனிருத் பாடிய 'ரா ரா ரா' என்ற பாடல் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் அனிருத்திடம் உதவியாளர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனிருத் பாடிய இந்த பாடலில் நயன்தாரா சொந்தக்குரலில் பேசிய வசனங்களும் உள்ளது. எனவே முதன்முதலாக அனிருத், நயன்தாரா இணைந்து குரல் கொடுத்துள்ள இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.