ராஜாவிற்கு செம மொக்கை கொடுத்த ஹிப் ஹாப் ஆதி....!!!

 
Published : Jan 26, 2017, 06:24 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
ராஜாவிற்கு செம மொக்கை கொடுத்த ஹிப் ஹாப் ஆதி....!!!

சுருக்கம்

தமிழுக்காகவும், தமிழர்களில் வீர விளையாட்டுக்காகவும் முதல் முதலில் சமூக வலைத்தளம் மூலம் குரல் கொடுத்தவர் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி.

மாணவர்களிடையே  ஜல்லிக்கட்டு பற்றிய  விழிப்புணர்வு வந்து அவர்கள் போராட்ட களத்தில் குதித்த போது அவர்களுடன் மெரினா, அலங்காநாலூர் போன்ற பல இடங்களில் நின்று போராடினார்.

பின் அவசர சட்டம் இயற்றியதும் அவர் தான் முதன் முதலாக நமக்கு வெற்றி கிடைத்துவிட்டது கலைந்து செல்லுங்கள் என்றும்  கூறினார்.

இதை தொடர்ந்து பலரும் நிலைமையை புரிந்துக்கொள்ளாமல் ஆதியை திட்ட ஆரம்பித்தார்கள், மேலும் அவர் விலை போய்விட்டார் என்று கூட கூறி அவர் மனதை புண்படுத்தினார்கள்.

இது குறித்து பேசிய  அரசியல் பிரமுகர் ராஜா ’ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழ் பிரிவினைவாதிகள், முஸ்லீம் அடிப்படைவாதிகள், தேச விரோதிகள் புகுந்து விட்டனர் என்பதை ஆதி தெளிவாக சொல்லி விட்டார்’ என கூறியிருந்தார்.

அதற்கு தற்போது தனது ட்விட்டர் மூலம் அவருக்கு பதில் கொடுத்துள்ளார் ஆதி  மேலும் அவர் கூறுகையில்     ‘சார், இதெல்லாம் ரொம்ப தப்பு. 

எனது படத்தை சில போஸ்டர்களில் சிலர் தவறாகப் பயன்படுத்தியதால்தான் நான் வெளியேறினேன் என்றும், போராட்டம் வெற்றி பெறும் வரை இளைஞர்கள் தங்களது போராட்டத்தைத் தொடர்வார்கள்’ என கூறி அவருக்கு செம மொக்கை கொடுத்துள்ளார் ஆதி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கம்பீரமாக எண்ட்ரி கொடுத்த பாஸ் கார்த்திக்- சூடுபிடிக்க தொடங்கிய கார்த்திகை தீபம்; கொண்டாடும் ஃபேன்ஸ்!
ஜன நாயகன் லேட்டஸ்ட் அப்டேட்: மீண்டும் ஒரு மெர்சல் மேஜிக்? இரண்டு கெட்டப்பில் மிரட்டப்போகும் விஜய்?