
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழகமே ஆதரவு தெரிவித்தது. இதற்காக கடந்த ஒரு வார காலமாக தமிழக இளைஞர்கள் ஆங்காங்கு ஒன்று கூடி , ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக மெரினாவில் இளைஞர்களின் பட்டாளாம் பல லச்சங்களை கடந்தது.
இந்நிலையில், இளைஞர்களுக்கு ஆதரவாக களம் இறங்கி தட்டி கொடுத்த பிரபலம் ராகவா லாரான்ஸ்.
உதவி :
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தவர் ராகவா லாரன்ஸ் . குறிப்பாக உண்ண உணவு , உறங்க பெட்சீட், மொபைல் டாய்லட் என அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து உதவி புரிந்தார்.
உடல் நிலை பாதிப்பு :
போராட்டதில் ஈடுபட்ட லாரன்ஸ் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது உடல் நிலை தேறிவரும் லாரன்சை மாணவர்கள் நேரில் சென்று பார்த்தனர்.
மீண்டும் 1௦ லட்சம் ரூபாய் உதவி :
ஜல்லிகட்டுக்காக தமிழக முதல்வர் அவசர சட்டத்தை கொண்டு வந்து , போராட்டத்திற்கு ஒரு தீர்வை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வரும் தருவாயில், இரண்டு நாட்களுக்கு முன்பு கலவரம் மூண்டது. போலீசாருக்கும் இளைஞர்களுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது. இதன் விளைவாக, கடைசி நாள் போராட்டத்தின் போது மீன் மார்கெட் முழுதும் உடைக்கபட்டது.
இதன் தொடர்ச்சியாக , தங்களுக்கு போராட்டத்தின் போது உதவி செய்த மீனவ மக்களுக்கு , இடிபட்ட மீன் மார்க்கெட்டை திரும்ப கட்டித்தர, மீண்டும் 1௦ லட்சம் ரூபாய் , மாணவர்களிடையே கொடுத்து பிள்ளையார்சுழி போட்டுள்ளார் லாரன்ஸ் .
இது குறித்து பேசிய லாரன்ஸ் , போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி கண்ட இளைஞர்களுக்கும், பாதுகாப்பு கொடுத்த போலீசாருக்கும், அவசர சட்டம் கொண்டுவர பாடுப்பட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் ஒ. பன்னீர் செல்வத்திற்கும் நன்றி தெரிவித்து பேசினார்.
முதல்வர் மற்றும் பிரதமருக்கு நன்றி ...!
அவசர சட்டத்தை கொண்டு வந்து, ஜல்லிக்கட்டுக்கு ஒரு நிரந்தர தீர்வை கொண்டு வந்த , முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாகவும் கூறினார். இதற்கு உறுதுணையாக இருந்த பிரதமர் அவர்களுக்கும் மாணவர்கள் சார்பாக நன்றியை தெரிவிப்பதாக கூறினார்.
நன்றி :
1 ௦ லட்சம் ரூபாய் கொடுத்து , மீன் மார்கெட் கட்ட உதவி புரிந்த ராகவா லாரான்ஸ்க்கு, மீனவ குடும்பங்கள் மனதார நன்றியை தெரிவித்தனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.