ஃபிரென்ட் ஷிப் தினத்தை முன்னிட்டு... நட்பை போற்றும் அனிருத் பாடிய RRR பட பாடல் வெளியானது!

Published : Aug 01, 2021, 11:52 AM IST
ஃபிரென்ட் ஷிப் தினத்தை முன்னிட்டு... நட்பை போற்றும் அனிருத் பாடிய RRR பட பாடல் வெளியானது!

சுருக்கம்

ராஜமௌலி இயக்கும் 'RRR ' திரைப்படம் கிட்ட தட்ட, இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கி விட்ட நிலையில், இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு கொடுத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், இந்த படத்தின் சிங்கிள் பாடல் எப்போது வெளியாகும் என்கிற தேதியை அதிகார பூர்வமாக படக்குழு வெளியிட்ட நிலையில் நட்பை போற்றும் பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.  

ராஜமௌலி இயக்கும் 'RRR ' திரைப்படம் கிட்ட தட்ட, இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கி விட்ட நிலையில், இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு கொடுத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், இந்த படத்தின் சிங்கிள் பாடல் எப்போது வெளியாகும் என்கிற தேதியை அதிகார பூர்வமாக படக்குழு வெளியிட்ட நிலையில் நட்பை போற்றும் பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்: அம்மன் வேஷம் போட்டு கொண்டு அசிங்கமாக பேசிய வனிதா..! கொந்தளித்த நடிகர் நகுல்..!
 

பாகுபலி என்கிற பிரமாண்ட படத்தை கொடுத்த இயக்குனர், எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த பிரமாண்ட படைப்பாக உருவாகியுள்ளது 'RRR ' திரைப்படம். சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ இந்த மாதம் 15 ஆம் தேதி வெளியாகி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

அக்டோபர் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தில், கதாநாயகர்களாக தெலுங்கு முன்னணி நடிகர்களான ராம் சரண், மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், பாலிவுட் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்: 48 வயதிலும் ஹீரோயின்களை ஏக்கப்பட வைத்த ரோஜா..! வெரைட்டி ட்ரெஸ்ஸில் பட்டையை கிளப்பும் போட்டோ ஷூட்..!
 

சுமார் 350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி 'ஃபிரென்ட் ஷிப்' தினத்தை முன்னிட்டு காலை 11 மணிக்கு, 'RRR ' படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் பாடலை வெளியிட உள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்: வெள்ளை நிற கவுனில்... ஏஞ்சல் நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் 'ராஜா ராணி 2' வில்லி அர்ச்சனா! ஸ்டன்னிங் போட்டோஸ்!
 

நண்பர்களுக்கு இடையேயான நட்பை போற்றும் வகையில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு கீரவாணி இசையமைக்க, பிரபல இசையமைப்பாளர் அனிரூத் பாடியுள்ளார். மேலும் அனிருத்துடன் இணைத்து விஜய் ஏசுதாஸ் உள்ளிட்ட 5 பிரபலங்கள் இந்த பாடலில் தோன்றியுள்ளனர். தற்போது இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Sunny Leone Net Worth: அடேங்கப்பா கிளாமர் குயின் சன்னி லியோன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Karuppu : சூர்யா முதல் த்ரிஷா வரை... கருப்பு படத்தில் நடிக்க வாரி வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?