என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது...சினேகனுடன் ஜோடியாக எடுத்த முதல் புகைப்படத்தை வெளியிட்ட கன்னிகா!

Published : Jul 31, 2021, 07:52 PM IST
என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது...சினேகனுடன் ஜோடியாக எடுத்த முதல் புகைப்படத்தை வெளியிட்ட கன்னிகா!

சுருக்கம்

பிரபல கவிஞர் சினேகனுக்கும், நடிகை கன்னிகா ரவிக்கும் ஜூலை 29 ஆம் தேதி சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் மிக பிரமாண்டமாக உலகநாயகன் கமலஹாசன் தலைமையில் திருமணம் நடந்து முடிந்த நிலையில்,  தற்போது 7 வருடத்திற்கு முன், காதலர் சினேகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை கன்னிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  

பிரபல கவிஞர் சினேகனுக்கும், நடிகை கன்னிகா ரவிக்கும் ஜூலை 29 ஆம் தேதி சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் மிக பிரமாண்டமாக உலகநாயகன் கமலஹாசன் தலைமையில் திருமணம் நடந்து முடிந்த நிலையில்,  தற்போது 7 வருடத்திற்கு முன், காதலர் சினேகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை கன்னிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பாடல்களை எழுதியவர் கவிஞர் சினேகன். நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக உயர்திரு 420, ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் என சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான சினேகன், இரண்டாவது இடத்தை பிடித்தார். 

சமீபகாலமாக, அரசியல் மீது தீவிர கவனம் செலுத்தி வரும் சினேகன்  உலக நாயகன் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றி வருகிறார். சென்னை வளசரவாக்கம் பகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினாலும் இது தனக்கு ஒரு பாடமாக இருந்ததாகவும், தொடர்து மக்கள் சேவையில் ஈடுபடுவேன் என கூறி வந்தார்.

இந்நிலையில் திடீர் என சினேகனின் திருமண பேச்சு அடிபட்டு வந்த நிலையில், இவரது காதல் விவகாரமும் வெளியே வந்தது. சினேகனும், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகையுமான கன்னிகாவும், சுமார் 8 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன், ஜூலை 29 ஆம் தேதி திருமணமும் பிரமாண்டமாக நடந்தது.

திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகும் நிலையில், கன்னிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சினேகனுடன் முதல் முதலாக கடந்த 7 வருடங்களுக்கு முன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, "என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது... வாழ்த்திய எல்லோருக்கும் நன்றிகள்.  கொரோனா சூழ்நிலையால் யாரையும் கூப்பிட முடியல கோவம் வேண்டாம். அன்புடன்  கன்னிகா சினேகன்  என பதிவிட்டுள்ளார்". இவரது இந்த பதிவு தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் நெட்டிசன்கள் பலர் தங்களுடைய திருமண வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி