தல அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா?... தயாரிப்பு நிறுவனம் குறித்தும் வெளியான அசத்தல் தகவல்...!

Published : Jul 31, 2021, 07:46 PM IST
தல அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா?... தயாரிப்பு நிறுவனம் குறித்தும் வெளியான அசத்தல் தகவல்...!

சுருக்கம்

அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் பூஜை 2019-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி நடைபெற்றது. அத்தோடு சரி அதன் பின்னர் ஒன்றரை ஆண்டுகளாக எவ்வித அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள் முட்டி மோதிய நிலையில், ஜூலை 11ம் தேதி மாலை 6 மணிக்கு விதவிதமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், மிரட்டலான மோஷன் போஸ்டரையும் வெளியிட்டு படக்குழு தல ரசிகர்களை திக்குமுக்காட வைத்து. 

அதுமட்டுமின்றி வெளியான சில மணி நேரங்களிலேயே அதிகம் லைக் செய்யப்பட்ட இந்திய மோஷன் போஸ்டர் என்ற பெருமையையும் பெற்றது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தில், ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக நடித்தவர். இந்த படம் இவருக்கு சிறந்த அறிமுகப்படமாக அமைந்தாலும், தமிழ் மற்றும் ஹிந்தியில் தொடர்ந்து தரமான கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார்.  மேலும் இந்த படத்தில் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு விரைவில் ஐதராபாத் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. வலிமை படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அஜித் 61 படத்தையும் ஹெச்.வினோத் இயக்க உள்ளதாகவும், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சத்யஜோதி பிலிம்ஸ் விவேகம், விஸ்வாசம் படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Chaitra Reddy : கணவரை டைவர்ஸ் செய்தாரா கயல் சீரியல் நடிகை? 6 வருட திருமண வாழ்க்கைக்கு எண்ட் கார்டு போட்டாரா சைத்ரா ரெட்டி?
Karthigai Deepam : கனடாவுக்கு கிளம்பும் ரேவதி... சாமுண்டீஸ்வரியின் சதித்திட்டம் பலிக்குமா?