Anirudh : அனிருத், சோமேட்டோ இடையேயான இந்த உரையாடலை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து பல்வேறு சுவாரஸ்யமான பதில்களை அளித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத். இவர் இசையமைப்பில் இந்த ஆண்டு வெளியான விஜய்யின் பீஸ்ட், விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனின் டான், கமலின் விக்ரம் என அனைத்து படங்களிலும் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின. இதுதவிர தற்போது தனுஷின் திருச்சிற்றம்பலம், அஜித்தின் ஏகே 62, ரஜினியின் ஜெயிலர், ஷாருக்கானின் ஜவான் என லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது.
இதையும் படியுங்கள்... முதல் நாளே இத்தனை கோடியா..! பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் அருண் விஜய்யின் ‘யானை’
இசையமைப்பாளர் அனிருத் படங்களுக்கு மட்டுமல்லாமல் விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ளார். அந்த வகையில் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோவுக்காக அனிருத் இசையமைத்திருந்த ‘சும்மா செம்ம சோமேட்டோ’ என்கிற பாடல் அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த பாடல் மிகவும் பிடித்திருந்தது.
இதையும் படியுங்கள்... ஜெய் பீம் எங்களோட கதை... திருடி படமா எடுத்துட்டாங்க..! சூர்யா மீது கதை திருட்டு வழக்கு - ரசிகர்கள் அதிர்ச்சி
இந்நிலையில், இப்பாடல் யூடியூபில் 78 லட்சம் பார்வைகளை பெற்றதற்காக அனிருத் சோமேட்டோ நிறுவனத்திடம் ட்ரீட் கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் சோமேட்டோ நிறுவனத்துடன் டுவிட்டரில் சாட் செய்துள்ளார். அதன் ஸ்கிரீன் ஷாட் இணையத்தில் படு வைரல் ஆகிறது. அந்த உரையாடலின் படி, “நண்பா சோமேட்டோ ரொம்ப நாள் ஆச்சுல? ‘சும்மா செம்ம' பாடல் 7.8 மில்லியன் வியூஸ்களை பெற்றதற்கு எப்போ ட்ரீட் குடுக்க போறீங்க” என அனிருத் முதலில் கேட்டார்.
இதையும் படியுங்கள்... ‘காஃபி வித் காதல்’ படத்துக்காக இளையராஜாவின் பிளாக்பஸ்டர் ஹிட் பாடலை ரீமிக்ஸ் செய்த யுவன் - வைரலாகும் வீடியோ
இதற்கு சோமேட்டோ நிறுவனம் அளித்த பதிலில், “ லிரிக்ஸ் ப்ரோவுக்கு இல்லாமையா? சொல்லுங்க நான் இப்போ என்ன பண்ணனும்? என கேட்டது. இதற்கு அவசரப்பட்டு ஓகே சொல்லிட்டியே குமாரு என ரிப்ளை செய்த அனிருத், எனக்கு ஒரு பீட்சா போதும், ஆனா என்னோட ரசிகர்களுக்கு நான் ட்ரீட் தரணும், அதனால உங்களுக்கு சோமேட்டோவுல ட்ரீட் வேணும்னா, ஏன் உங்களுக்கு நான் இத கொடுக்கணும்னு கமெண்ட் பண்ணுங்க. 100 சுவாரஸ்யமான பதில் அனுப்புபவர்களுக்கு இலவசமா ட்ரீட்.. சோமேட்டோ ஓகே தான? என பதிவிட, இதற்கு பதிலளித்த சோமேட்டோ, இந்த டுவிஸ்ட நாங்க எதிர்பாக்கல ப்ரோ! இருந்தாலும் ஆரம்பிக்கலாமா? என பதிவிட்டிருந்தது.
அனிருத், சோமேட்டோ இடையேயான இந்த உரையாடலை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து பல்வேறு சுவாரஸ்யமான பதில்களை அளித்து வருகின்றனர்.