ஏ.ஆர்.ரகுமானை விட டபுள் மடங்கு சம்பளமா? அனிருத்தால் அரண்டு போன ஜெயிலர் 2 டீம்!

By Ganesh A  |  First Published Dec 18, 2024, 11:07 AM IST

Anirudh Salary : ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்துக்கு இசையமைக்க அனிருத் கேட்டுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.


இசையமைப்பாளர் அனிருத்

தனுஷின் 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடல் உலகம் முழுவதும் பேமஸ் ஆனதால் முதல் படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றார் அனிருத். இதனால் கோலிவுட்டில் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன. அந்த வகையில் குறுகிய காலத்திலேயே விஜய்யின் கத்தி, அஜித்தின் வேதாளம் என டாப் ஹீரோக்களுக்கு இசையமைத்து நட்சத்திர இசையமைப்பாளராக உருவெடுத்தார் அனி.

Tap to resize

Latest Videos

undefined

அனிருத் கைவசம் உள்ள படங்கள்

அனிருத் தான் தற்போது கோலிவுட்டில் நம்பர் 1 இசையமைப்பாளராக உள்ளார். அவர் கைவசம் விஜய்யின் தளபதி 69, அஜித்தின் விடாமுயற்சி, கமல்ஹாசனின் இந்தியன் 3, ரஜினிகாந்தின் கூலி, சிவகார்த்திகேயனின் எஸ்.கே.23 போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர பாலிவுட்டில் ஷாருக்கான் உடன் ஒரு படம், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா படம், அட்லீ - சல்மான் கான் கூட்டணியில் உருவாகும் பான் இந்தியா படம் என லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது.

இதையும் படியுங்கள்... அஜித்தின் விடாமுயற்சி; செம வைப் மோடில் BGM இசைக்கும் அனிரூத்! Viral Video!

ஜெயிலர் 2

ரஜினியின் கூலி பட இசையமைப்பு பணிகளில் பிசியாக உள்ள அனிருத், அடுத்ததாக ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 படத்துக்கும் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் ஜெயிலர் 2 திரைப்படத்தின் புரோமோ ஷூட் சென்னையில் நடைபெற்றது.

அனிருத் சம்பளம்

இந்த புரோமோ ரஜினிகாந்த் பிறந்தநாளன்றே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படக்குழு அதை வெளியிடவில்லை. இந்த புரோமோ ரிலீஸ் தாமதத்திற்கு அனிருத் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் ஜெயிலர் 2 படத்துக்காக அவர் 17 கோடி சம்பளம் கேட்டிருக்கிறாராம். ஜெயிலர் படத்துக்கு அவர் வாங்கியதை விட இது அதிகம் என்பதால் படக்குழு இதுகுறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாம்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானே தற்போது ஒரு படத்துக்கு ரூ.8 கோடி சம்பளம் வாங்கி வரும் நிலையில், அவரைவிட அனிருத் டபுள் மடங்கு சம்பளம் கேட்டுள்ளது கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக் ஆக பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பள விஷயத்தில் உடன்பாடு ஏற்பட்ட பின்னரே ஜெயிலர் 2 புரோமோ வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்...  கூலி படத்தில் இணைந்த சாய் அபயங்கர்; அப்போ அனிருத் இசையமைக்கலையா?

click me!