Atlee Next Movie : பாலிவுட்டில் பேபி ஜான் என்கிற படத்தை தயாரித்துள்ள அட்லீ, தன்னுடைய அடுத்த பட ஹீரோ யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பாலிவுட்டில் செட்டில் ஆன அட்லீ
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என வரிசையாக நான்கு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த அட்லீ, அடுத்ததாக பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து அதிரிபுதிரியான வெற்றியை ருசித்தது. இதையடுத்து பாலிவுட்டிலேயே செட்டில் ஆன அட்லீ, தற்போது பேபி ஜான் என்கிற திரைப்படத்தை தயாரித்து உள்ளார்.
undefined
தயாரிப்பில் பிசி
தமிழில் விஜய் நடித்து ஹிட் ஆன தெறி படத்தின் இந்தி ரீமேக் தான் இந்த பேபி ஜான். இப்படத்தில் வருண் தவான் நாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் திரைக்கு வருகிறது. பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட்டில் தயாரிப்பாளராக அறிமுகமாகி உள்ள அட்லீ, தான் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த அப்டேட்டையும் வெளியிட்டு இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... என்னுடைய இந்த நிலைக்கு காரணம் அவங்க 2 பேர் தான்! நன்றி மறவாத அட்லீ எமோஷனல் பேச்சு!
அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி
அதன்படி அட்லீ அடுத்ததாக தமிழ் படம் ஒன்றை தயாரிக்க உள்ளாராம். அதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். இவர் ஏற்கனவே அட்லீ இயக்கிய ஜவான் படத்தில் வில்லனாக நடித்திருந்த நிலையில், தற்போது அட்லீ தயாரிப்பில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இப்படத்தை பாலாஜி தரணீதரன் இயக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி போன்ற படங்களை இயக்கியவர்.
அட்லீ இயக்கும் அடுத்த படம்
இதுதவிர அட்லீ இயக்க உள்ள அடுத்த படத்தில் சல்மான் கான் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அட்லீயின் 6-வது படமாக இது உருவாக உள்ளது. இப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க உள்ளாராம். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு முதல் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார் அட்லீ.
இதையும் படியுங்கள்... குருவை மிஞ்சிய சிஷ்யன்; ஷங்கரை விட டபுள் மடங்கு சம்பளம் வாங்கும் அட்லீ!