
தனுஷின் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய அனிருத் சில ஆண்டுகளில் திரையுலக பிரபலங்களையும், தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர். இவரின் திரைப்பயணத்தில் இவர் பிலிம்பேர், விஜய் தொலைக்காட்சி விருது, எடிசன் விருது என பல விருதுகளை இசையமைப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் பல விருதுகளை பெற்று புகழ்பெற்றுள்ளார்.
தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அஜித், ரஜினி, சூர்யா என முன்னணி திரை பிரபலங்களின் படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத் சமீபத்தில் வெளியான டாக்டர் படத்திற்கு இசை வடிவம் கொடுத்திருந்தார். இதன் பாடல்கள் வெளியான சில தினங்களிலேயே 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருந்தது. சிவகார்த்திகேயன் வரிகளில் வெளியான செல்லம்மா பாடல் இளைஞர்களை கவர்ந்திழுத்த பாடலாக வெற்றி பெற்றது.
அதோடு கமல், விஜய் சேதுபதி, பகத் பாசிலை வைத்து மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் விக்ரம் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார். இந்த படங்களுக்காக லட்சக்கணக்கில் ரூபாயை சம்பளமாக பேசியுள்ளதாக தெரிகிறது. இவரது இசை பணிக்காக சென்னையில் மிகப்பெரிய ஸ்டுடியோ ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் தான்அவரது இசையை கம்போஸ் செய்து வருகிறாராம். அந்த ஸ்டுடியோவிற்கு வாடகை மட்டும் மாதம் சுமார் 2 லட்சம் ரூபாயாம்.
அந்த ஸ்டுடியோவின் உரிமையாளர் துபாயில் உள்ள நிலையில் அனிருத் கடந்த சில மாதங்களாக வாடகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அனிரூத் முறையாக பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த உரிமையாளர் நேரடியாகவே சென்னை வந்துவிட்டாராம். உரிமையாளர் சென்னை வந்த செய்தி அறிந்த இசையமைப்பாளர் மும்பைக்கு சென்று விட்டார் என கிசுகிசுக்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.