Aneethi OTT: வெளியாகி இரண்டு மாதத்திற்கு பின்னர் 2 ஓடிடி தளத்தில் ரிலீசாகும் 'அநீதி'! எப்போது தெரியுமா?

By manimegalai a  |  First Published Sep 13, 2023, 8:33 PM IST

எதார்த்தமான கதைக்களத்தை மையமாக வைத்து இயக்கும் இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்திருந்த, 'அநீதி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இரண்டு மாதத்திற்கு பின்னர் வெளியாகியுள்ளது.
 


தமிழ் சினிமாவில் எதார்த்தமான கதைகளை இயக்கி வெற்றிகண்டவர் இயக்குனர் வசந்த பாலன். வெயில், அங்காடித்தெரு, போன்ற திரைப்படங்களை இயக்கிய இவர்,  'ஜெயில்' படத்திற்கு பின்னர், மாஸ்டர் பட வில்லன் அர்ஜுன் தாஸை ஹீரோவாக வைத்து இயக்கி இருந்த திரைப்படம், 'அநீதி'. 

இந்த படத்திலும், மனநோயால் அவதிப்படும் ஒரு உணவு டெலிவரி பாய்யின் வாழ்க்கையில்,நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து விறுவிறுப்பான, மற்றும் பரபரப்பான காட்சிகளுடன் படமாக்க பட்டிருந்தது. அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்திருந்தார். மனநோயால் பாதிக்கப்பட்ட ஹீரோ அர்ஜுன் தாஸும், ஹீரோயினும் சூழ்நிலை காரணமாக ஒரு குற்ற சம்பவத்தில் சிக்கிக் கொள்ள, அதன் பின் என்ன நடக்கிறது? என்பதை யூகிக்க முடியாத கதைக்களத்துடன் படமாக்கி இருந்தார் இயக்குனர்.

Tap to resize

Latest Videos

அட்ரா சக்க.. சொந்த ஊரில் பலர் உதவியால் சொந்த வீடு கட்டிய பிக்பாஸ் தாமரை! எப்போது கிரஹப்பிரவேசம் தெரியுமா?

மேலும் இந்த படத்தில் காளி வெங்கட், வனிதா விஜயகுமார், அர்ஜூன் சிதம்பரம், பரணி, சாரா, அறந்தாங்கி நிஷா, சிவா போன்ற பலர் நடித்திருந்தனர். ஏற்கனவே பல படங்களில் தன்னுடைய வில்லத்தனத்தை அர்ஜுன் தாஸ் வெளிப்படுத்தி இருந்தாலும், இப்படம் இவரை வேறு ஒருகோணத்தில் பார்க்க வைத்தது. ரசிகர்களின் மத்தியில் இவர் நடிப்புக்கு பாராட்டுகளும் குவிந்தது. அன்பான காதலன், வெறிபிடித்த மனநோயாளி என தன்னுடைய நடிப்பை அழகாக வேறுபடுத்தி காட்டி இருந்தார்.

55 வயசு.. பாட்டியானாலும் வனிதா விஜயகுமார் அக்கா கவிதாவின் பியூட்டி குறையல! வைரலாகும் ஃபேமிலி போட்டோஸ்!

ரசிகர்களின் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவந்த இந்த திரைப்படம், ஜூலை மாதம் வெளியான நிலையில், இரண்டு மாதம் கழித்து தற்போது ஓடிடி-யில் ரிலீஸ் ஆகா உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி, ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அர்ஜுன் தாஸ் ரசிகர்களை உச்சாகப்படுத்தியுள்ளது.

click me!