எந்த நடிகைக்கு வரும் இப்படி ஒரு துணிச்சல்? ஆண்ரியாவின் முயற்சியை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்!! வைரல் வீடியோ.

Published : Jul 08, 2022, 11:23 AM IST
எந்த நடிகைக்கு வரும் இப்படி ஒரு துணிச்சல்? ஆண்ரியாவின் முயற்சியை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்!! வைரல் வீடியோ.

சுருக்கம்

நடிகை ஆண்ட்ரியா தற்போது நடித்து முடித்துள்ள, 'பிசாசு 2' படத்திற்காக, நடிகைகள் செய்ய தயங்கும் முயற்சியில்... துணிந்து இறங்கியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட, ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை ஆண்ரியாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.  

நடிகை ஆண்ட்ரியா தற்போது நடித்து முடித்துள்ள, 'பிசாசு 2' படத்திற்காக, நடிகைகள் செய்ய தயங்கும் முயற்சியில்... துணிந்து இறங்கியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட, ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை ஆண்ரியாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.

பொதுவாக தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளை சரணமாக பேசத் தெரிந்த நடிகைகள் கூட, தாங்கள் நடிக்கும் படங்களில் டப்பிங் பேச தயங்குவது உண்டு. ஆனால் அந்த மொழியே தெரியாமல் கற்றுக்கொண்டு டப்பிங் பேச வேண்டும் என்பதற்கு நிச்சயம் ஒரு தைரியம் வேண்டும். அந்த முயற்சியில் தான் தற்போது துணிந்து இறங்கியுள்ளார் ஆண்ட்ரியா.

மேலும் செய்திகள்: கணவர் இறந்து ஒரு வாரமே ஆகும் நிலையில்... மீனா பற்றி வெளியான இப்படி ஒரு வதந்தி! சொல்லியும் கேட்கலையே..!
 

ஆண்ட்ரியா இதுவரை பல படங்களில் நடித்திருந்தாலும், தற்போது எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று அவர் மிஷ்கின் இயக்கத்தில் நடித்துள்ள 'பிசாசு 2'.  இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படம் வெளியான பின்னர் தன்னுடைய திரையுலக வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என காத்திருக்கிறார் ஆண்ட்ரியா.

மேலும் செய்திகள்: கவர்ச்சி காட்டுவதில் அக்கா யாஷிகாவுக்கே டஃப் கொடுக்கும் ஒஷீன்..! ப்பா... அதுக்குன்னு இப்படியா?
 

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த 'பிசாசு 2' படத்திற்கு முதல் முறையாக தன்னுடைய சொந்த குரலில் தெலுங்கில் டப்பிங் பேசுகிறார் நடிகை ஆண்ட்ரியா. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், முதன் முதலில் தெலுங்கில் டப்பிங் பேச முயற்சிக்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு தெலுங்கு கற்றுக் கொடுக்கும் நபர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள இந்த வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, பலரும் ஆண்ட்ரியாவின் துணிச்சலை கண்டு வியந்து பாராட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்: கிராப் டாப்பில்... இடையழகை லைட்டாக காட்டி சூடேற்றும் பிக்பாஸ் ரேஷ்மா..! கும்முனு கொடுத்த கியூட் போஸ்!!
 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!
பாசத்தை உலுக்கிய துயரங்கள்; பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் நடந்த சோக சம்பவங்கள்!