டிவியில் இருந்து துரத்தி விட்டதால்... முதலாளியான மோனிகா ...

 
Published : Nov 29, 2017, 05:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
டிவியில் இருந்து துரத்தி விட்டதால்... முதலாளியான மோனிகா ...

சுருக்கம்

anchor monica turn to website

தமிழக மக்களின் மனதில் நின்ற பிரபல தொலைகாட்சித் தொகுப்பாளர், மோனிகா  தற்போது முதலாளி ஆகியுள்ளார் என்றால் பாருங்களேன்...

பிரபல தனியார் தொலைக்காட்சியில் சில ஆண்டுகளுக்கு முன் வானிலை செய்தியை வாசித்துவந்தார் மோனிகா ... பொதுவாகவே செய்திகள் வாசிப்பதாக இருந்தாலும் திரையில் உள்ள வார்த்தையை அப்படியே பார்த்துப் படிப்பதை விட செய்தியை உள்வாங்கி தீவிரமாக அலசி ஆராய்பவர்... அதனுடைய தொடர்ச்சிதானோ  என்னவோ ஜெ மறைவிற்கு பின் தமிழக அரசியலையும் , குறிப்பாக பன்னீர் செல்வம் அணியையும், எடப்பாடியுடன் இணைந்த பின்பு துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் நிலையையும் தினகரன்... தீபா ... என யாரையும் விட்டு வைக்காமல் தார தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா என்பதற்கு ஏற்ப அக்கு வேறு ஆணி வேறாக ஒவ்வொருவரையும் பற்றி, சும்மா... புட்டு புட்டு வைத்தார்  மோனிகா.

கடைசியாக தன்னுடைய முழுத் திறமையையும் காட்டி, அதிமுக ஆதரவு தனியார் தொலைக்காட்சியில் நிருபித்து வந்தார் மோனிகா. ஆனால், ஒரே நாளில் வேலை செய்தது போதும் என வீட்டிற்கு அனுப்பியது நிறுவனம். காரணம் ... எந்த அரசியல் தலைவரைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக பிரிக்க வேண்டும் என்ற சூட்சுமம் தெரியாததே...

வேலை போனாலும் திறமை போய் விடுமா என்ன? வேலை கிடையாது என தூக்கிப் போடப் பட்டவர்கள் மத்தியில் 'எழுச்சி' மூலம் எழுந்து நின்று தன்னுடைய திறமையை நிருபித்து வருகிறார் மோனிகா... 'எழுச்சி'  என்பது மோனிகா அவரே உருவாக்கி உள்ள ஓர் ஊடகம். இந்த ஊடகம் ஆரம்பித்த ஒரு சில மாதங்களிலேயே பல்லாயிரக்கணக்கான பாலோவெர்ஸ் இவருக்கு கூடி விட்டனர்.

இவர் வேலை செய்த போது... ஒரு சில அரசியல் தலைவர்களை மட்டுமே குறிவைத்துப் பேசி வந்த இவர் தற்போது அனைத்து அரசியல் தலைவர்களையும் பாரபட்சம் பார்க்காமல் கழுவிக் கழுவி ஊத்தி வருகிறார். 

ஏற்கெனவே ஆர்.கே நகர் இடைத்தேர்தல் அறிவித்த போது... அரசியல் தலைவர்கள் யோக்கியதையை ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி... பலரது கோபத்திற்கு ஆளான இவர் மீண்டும் தற்போது ஆர்.கே நகர் தேர்தல் சூடு பிடிக்க உள்ளதால் யாரை எப்படித் திட்டுவது என யோசித்து வருகிறாராம்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!