மீண்டும் அட்லீயுடன் கை கோர்க்கும் விஜய் - ஆளப்போறான் தமிழன்?

 
Published : Nov 29, 2017, 05:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
மீண்டும் அட்லீயுடன் கை கோர்க்கும் விஜய் - ஆளப்போறான் தமிழன்?

சுருக்கம்

vijay next film announced

இயக்குனர் அட்லீ இளைய தளபதி விஜயை வைத்து இயக்கிய முதல் படம் தெறி. இந்தப்படம் விஜயின் திரைப்பயணத்தில் மிகப் பெரிய வெற்றியைக்கண்ட  படம்.மீண்டும் அட்லீ மற்றும் விஜயின் கூட்டணியில் கடந்த தீபாவளி அன்று வெளிவந்த படம்தான் மெர்சல். இப்படம் பல சர்ச்சைகளில் சிக்கியது. மேலும்  எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானாலும் தமிழ்த் திரையுலகின் பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்றாக அமைந்தது.

இதையடுத்து மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி இணையவுள்ளது.விஜயின் 62-வது  படத்தை முருகதாஸ் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு பிறகு இளையதளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் நடிப்பார் என்று தெரியவந்துள்ளது.

முருகதாஸ் இயக்கும் விஜயின் 62-வது படத்திற்கே பெயர் வைக்காத நிலையில், அட்லீ இயக்கும் விஜயின் 63-வது படத்திற்கு " ஆளப்போறான் தமிழன்" என்று டைட்டில் வைத்துள்ளார்கள் என்று தகவல் வந்துள்ளது. தகவல் தெரிந்த  மறு நொடியிலிருந்து "ஆளப்போகும் தமிழனின் " ரசிகர்கள் பட டைட்டிலை  கொண்டாடி வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!