
சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனாம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள DMS வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக செவிலியர்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியால் போலி என்று அறியப்பட்டு பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான ஜூலி. 'நானும் நர்சு தான்... நானும் நர்சு தான்... என வடிவேலு பாணியில் கூறிக்கொண்டு இந்த போராட்டத்தில் குதிக்க வந்தார்.
ஆனால் போலீசார்... இவரை கேட்டுக்கு வெளியிலேயே நிறுத்தினர். நானும் செவிலியர் தான் உள்ளே விடுங்கள் என ஜூலி போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்
அனைத்து செவிலியர்களும், செவிலியர்களுக்கான உடை அணிந்து போராடி வரும் நிலையில் ஜூலி, ஜீன்ஸ் பேண்டையும்... ஒரு பனியனையும் போட்டுக்கொண்டு பேஷன் ஷோவுக்கு வருவது போல் வந்துள்ளார்
இங்கு நீங்கள் என்ன கவனிக்க வேண்டும் என்றால், டி எம் எஸ் வளாகத்திற்குள் நுழைய அனுமதி கேட்டபோது, போலீசார் துரத்தி அனுப்பும் அந்த காட்சியில் கூட ஜூலி கூலாக எடுத்துக்கொண்டு சிரிப்பதை பார்க்க முடிந்தது
மாரல்
ஜல்லிக்கட்டு மூலமாக வீர தமிழச்சி என மக்கள் விவரம் தெரியாமல் அழைக்கப்பட்டதை பெரிய விஷியமாக எடுத்துக்கொண்ட ஜூலி தற்போது செவிலியர்கள் போராட்டத்திலும் தன்னை வீர தமிழச்சி என்று கோஷம் போட்டு உள்ளே வர அனுமதி கொடுப்பார்கள் என நினைத்தது....ஆனால் கிடைத்ததோ....அனுமதி மறுப்பு......
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.