Manimegalai : சின்னத்திரையை கலக்கும் நட்சத்திர ஜோடி.. ஹுசைன், மணிமேகலையின் யூடியூப் வருமானம் எவ்வளவு தெரியுமா?

By Ansgar R  |  First Published Apr 26, 2024, 1:07 PM IST

Manimegalai & Hussain : வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களும் மக்கள் மத்தியில் இப்பொழுது மிகப்பெரிய அளவிலான வரவேற்பு பெற்று வருகின்றனர்.


அந்த வகையில் மணிமேகலை மற்றும் ஹுசைன் ஜோடிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. கோவில் கடந்த 1992 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் பிரபல தொகுப்பாளினி மணிமேகலை. சிறு வயது முதலையே கலைத்துறை மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக கடந்த 2009 ஆம் ஆண்டு மணிமேகலை பண்பலை வர்ணனையாளராக பணியாற்று தொடங்கினார். 

அதன்பிறகு தொடர்ச்சியாக பிரபல சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறினார். கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான "சூப்பர் ஹிட்" என்ற நிகழ்ச்சி தான் இவர் முதல் முதலில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி. அதன் பிறகு சுமார் 8 ஆண்டுகள் சன் நிறுவனத்துடன் பயணித்தார் மணிமேகலை. 

Latest Videos

Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஸ்டார் விஜய் சேனலில் தனது பயணத்தை தொடங்கினார். இதற்கிடையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அவரது காதலர் உசேன் ஷேக் காதர் அவர்களை திருமணம் செய்து கொண்ட மணிமேகலை, தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். 

மேலும் ஹுசைன் மற்றும் மணிமேகலை ஆகிய இருவரும் சொந்தமாக ஒரு youtube சேனலையும் நடத்தி வருகின்றனர். அதன் மூலம் மாசம் 70 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து வருகின்றனர். அண்மையில் இந்த ஜோடி அண்மையில் ஒரு புதிய வீட்டை வாங்கியதும் குறிப்பிடத்தக்கது. மக்கள் மத்தியில் அவர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.  

Samantha : விவாகரத்து ஆனாலும்... திருமண ஆடையை தூக்கிப் போட மனமின்றி; வெட்டிங் டிரெஸை வேறலெவலில் மாற்றிய சமந்தா

click me!