
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடிப்பில் கலக்கி முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை எமி ஜாக்சன்.
கடந்த சில மாதங்களுக்கு முன் இவருக்கும், இவருடைய காதலருக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், திருமணத்திற்கு முன்பே எமி கர்ப்பமாக உள்ளதாக அறிவித்தார்.
மேலும் திடீரென கர்ப்பமாக இருப்பதை, காதலனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார். இதனால் அதிர்ச்சியில் உறைந்தது ரசிகர்கள் மட்டும் அல்ல, இவரை புதிய படங்களில் கமிட் செய்யலாம் என்கிற யோசனையில் இருந்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தான்.
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், அதிக எடை கொண்ட பொருட்களை தூக்கக் கூடாது உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் எமி ஜாக்சன் தற்போது அவருடைய காதலருடன் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்து ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இப்படி செய்யலாமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். எனினும் சிலர் மருத்துவரீதியாக லேசான உடற்பயிற்சிகளை செய்வது குழந்தைக்கும் தாய்க்கும் ஆரோக்கியமானது என கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.