ராஷ்மிகா முன்னதாக நடித்த குட்பை படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. அதில் ராஷ்மிகா மற்றும் அமிதாப் பச்சன் அழகான தந்தை மகள் தோற்றத்தில் இருக்கின்றனர்.
புஷ்பா படம் மூலம் இந்திய ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு நாயகியான இவர் முன்னதாக விஜய் தேவரகொண்டா உடன் நடித்த கீதா கோவிந்தம் படம் மூலம் தமிழ் திரையுலகின் கவனத்தை ஈர்த்திருந்தார். பின்னர் டியர் காம்ரேட், புஷ்பா தி ரைஸ் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்திருந்தார். இதில் புஷ்பா படத்தில் கிராமத்து பெண்ணாக வந்து தென்னிந்திய ரசிகர்களின் மனங்களை கவர்ந்துவிட்டார். இதனால் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிய துவங்கியுள்ளது. அதன்படி தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் ரஷ்மிக்கா. வம்சி இயக்கம் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், பிரபு, குஷ்பூ, ஷாம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
இதற்கு இடையே பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி மாஸ் காட்டி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அந்த வகையில் அமிதாப்பச்சனுடன் குட்பை, சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு ஆகிய படங்களில் ராஷ்மிகா ஏற்கனவே நடத்த முடித்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது ரன்வீர் சிங்குடன் இணைந்து அனிமல் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு...கார்த்தியின் அடுத்த திட்டம் ..வெளிநாட்டு பெயரில் இறங்க முடிவாம்..
இதையடுத்து டைகர் ஷெராஃப்புடன் புதிய திட்டத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் ராஷ்மிகா. இந்த படத்தை கரண் ஜோகர் தயாரிக்க உள்ளதாக முன்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் பட்ஜெட் அதிகம் என்பதால் திடீரென படத்தை தயாரிப்பதில் இருந்து பின்வாங்கி விட்டாராம் கரண் ஜோகர். பாலிவுட் பிரபலமான மற்றும் கரண் பிரபலங்கள் கலந்து கொள்ளும் சர்ச்சைக்கு பஞ்சமில்லாத பிரபல நிகழ்ச்சியான காஃபி வித் கரண் என்னும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
முன்னதாக யோவர் தயாரிப்பில் வெளிவந்த படங்கள் தோல்வியை தழுவியுள்ளதால் தான் தற்போது பாலிவுட்டுக்கு புது முகமாக வந்த ரஷ்மிகா வைத்து படம் தயாரிக்க கரண் தாங்கியதாகவும் தகவல் உள்ளது. பிரபல தயாரிப்பாளர் பின் பின் வாங்கியதால் பாலிவுட்டில் ராஷ்மிகா மீது ராசி இல்லாதவர் என்கிற இமேஜ் கிரியேட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு....டூ பீஸில் பார்த்தவுடன் பக்கென்றாக்கும் பாலிவுட் பிரபலம்...கிக் போட்டோஸ் இதோ !
இதற்கிடையே ராஷ்மிகா முன்னதாக நடித்த குட்பை படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. அதில் ராஷ்மிகா மற்றும் அமிதாப் பச்சன் அழகான தந்தை மகள் தோற்றத்தில் இருக்கின்றனர். கண்களில் ஆனந்த கண்ணீருடன் காட்சியளிக்கு நாயகியுடன் பட்டம் விட்டபடி காட்சியளிக்கிறார் அமிதாப். படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை விகாஸ் பாஹ்ல் இயக்க ஏக்தா கபூர் தயாரித்து வருகிறார். குட்பையில் அமிதாப் பச்சன், ராஷ்மிகா மந்தனா, சாஹில் மேத்தா, ஷிவின் நரங் மற்றும் பாவில் குலாட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...இனி... டாக்டர் U1... கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற யுவன் சங்கர் ராஜாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்