Alya baby: தனது 2-வது மகனுடன் வீட்டிற்கு வந்த ஆல்யா மானசா! தம்பி வந்தாச்சு...ஓடி வந்து கொஞ்சிய அய்லா பாப்பா!

By Anu Kan  |  First Published Apr 16, 2022, 3:30 PM IST

Alya baby: நடிகை ஆல்யா மானசா மருத்துவமனையில் இருந்து சமீபத்தில்  தனது மகனுடன் வீட்டிற்கு வந்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


ஆல்யா - சஞ்சீவ் ஜோடி:

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான ஜோடியாக இருப்பவர்கள் சஞ்சீவ் ஆல்யா தம்பதி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர், கடந்த 2019-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த காதல் ஜோடிக்கு, ஏற்கனவே ஐலா என்ற மகள் இருக்கிறார்.  

Tap to resize

Latest Videos

ஆல்யா மானசா , ராஜா ராணி 2 சீரியல்:

undefined

ஆல்யா மானசா கர்ப்பமாக இருக்கும் போதும், ராஜா ராணி 2 என்ற சீரியலில்  சித்துவிற்கு ஜோடியாக, போலீஸ் அதிகாரியாக நடித்து வந்தார். இடையில் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தபோதும், நடித்து வந்தார். குழந்தை பிறக்க இருக்கும் சில நாட்கள் முன்பு வரை நடித்துள்ளார். 

அண்மையில் அவர் தொடரில் இருந்து வெளியேற அவருக்கு பதில் ரியா என்பவர் சந்தியா வேடத்தில் நடிக்கிறார். இதையடுத்து, 'இனி நான் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடிக்க வரவே மாட்டேன் என்று தெள்ளத்தெளிவாக' கூறிவிட்டார். 

சஞ்சீவ் கயல் சீரியல் நாயகன்:

சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பான கயல் சீரியலில் நாயகனாக நடித்து வந்தார். சமீபத்தில், இவருக்கு சன் குடும்ப விருதுகளில், சிறந்த நயாகனுக்காக விருது கிடைத்தது குறிப்பிடக்கத்தக்கது. இதையடுத்து, கடந்த மாதம் 26ம் தேதி அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இது தொடர்பான வீடியோவை சஞ்சீவ் இணையத்தில் வெளியிட்டிருந்தார்.

வீட்டிற்கு வந்த ஆல்யாவின் நெகிழ்ச்சி தருணம்:

மேலும் படிக்க....Rajini: KGF 2 படம் பார்த்த ரஜினியின் ரீயாக்சன் என்ன தெரியுமா..? பட தயாரிப்பாளரிடம் போனில் சொன்ன தகவல்.!

இந்த நிலையில், நடிகை ஆல்யா மானசா மருத்துவமனையில் இருந்து சமீபத்தில்  தனது மகனுடன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது உறவினர்கள் அவர்களுக்கு ஆர்த்தி எடுத்து வரவேற்றனர். மேலும், அவரது மகள்  அய்லா பாப்பா ஓடிப் போய் தனது தம்பியை பார்க்க வரும் வீடியோ  வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.

click me!