vijay : சமீபத்திய நேர்காணல் நிகழ்ச்சியில் தந்தை குறித்து உருக்கமாக பேசி இருந்தார் விஜய். தந்தை என்பவர் கடவுளுக்கு சமம் என்றும், அவர் குடும்பத்தின் ஆணிவேராக இருப்பதாகவும் கூறினார்.
தந்தை குறித்து விஜய் உருக்கம்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் இவர், கடைசியாக நடித்த படம் பீஸ்ட். கடந்த சில தினங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தின் புரமோஷனுக்காக நெல்சன் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் தந்தை குறித்து உருக்கமாக பேசி இருந்தார் விஜய். தந்தை என்பவர் கடவுளுக்கு சமம் என்றும், அவர் குடும்பத்தின் ஆணிவேராக இருப்பதாகவும் கூறினார். நடிகர் விஜய் அவரது தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரிடம் பேசாமல் இருந்த போதிலும் அவரைப்பற்றி இவ்வாறு கூறியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதைக்கேட்ட எஸ்.ஏ.சி.யும் மகிழ்ச்சி அடைந்தார்.
யார் இந்த எஸ்.ஏ.சி.
இந்நிலையில், யார் இந்த எஸ்.ஏ.சி என்கிற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், அதில் சினிமாவில் தான் சந்தித்த இன்னல்கள், கஷ்டங்கள் குறித்து பேசி வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நடிகர் விஜய், லெட்டர் எழுதி வச்சுட்டு வீட்டை விட்டு ஓடிப்போன சம்பவம் குறித்து பேசி உள்ளார்.
விஜய் லெட்டர் எழுதிவச்சிட்டு ஓடிப்போனது ஏன்?
அதன்படி, 1992-ம் ஆண்டு சினிமாவில் நடிக்க விரும்புவதாக தனது தந்தையிடம் கூறி உள்ளார் விஜய். இதைக்கேட்ட எஸ்.ஏ.சி, அதெல்லாம் முடியாது, உன்னை டாக்டர் தான் படிக்க வைப்பேன் என சொன்னாராம். ஆனால் நடிகனாக வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த விஜய், ஒருநாள் ‘என்னை தேடாதீர்கள்’ என லெட்டர் எழுதி வச்சுட்டு வீட்டை விட்டு போயிட்டாரு.
அன்றைய தினம் முழுவதும் விஜய்யை தேடி அழைந்ததாகவும், இறுதியில் உதயம் தியேட்டரில் அவர் படம் பார்த்துக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து நிம்மதி அடைந்ததாகவும் கூறியுள்ளார் எஸ்.ஏ.சி. அத்தகைய பிடிவாதத்தால் தான் நடிகர் விஜய் இன்று சினிமாவில் உச்ச நட்சத்திரமாக நிலைத்து இருப்பதாக பெருமிதத்துடன் கூறினார் எஸ்.ஏ.சி.
இதையும் படியுங்கள்... cobra movie Update : ரிலீசுக்கு ரெடியாகும் விக்ரமின் ‘கோப்ரா’.... சுடச்சுட வருகிறது ஹாட் அப்டேட்