The Delhi Files : காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குனரின் அடுத்த அதிரடி ‘தி டெல்லி ஃபைல்ஸ்’ - இது என்ன கதை தெரியுமா?

By Asianet Tamil cinema  |  First Published Apr 16, 2022, 11:51 AM IST

The Delhi Files : தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 


விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கேர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இத்திரைப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து படமாக்கப்பட்டிருந்தது. 

அதன்படி காஷ்மீரில் கடந்த 1990களில் தீவிரவாத அமைப்புகள் தலைதூக்கியதை அடுத்து, அங்குள்ள ஹிந்துக்களை பத்திரமாக அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அங்கு கொடூர வன்முறைத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன. அதனை அப்படியே கண்முன் கொண்டுவந்த திரைப்படம் தான் விவேக் அக்னிகோத்ரியின் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. 

Latest Videos

வெளியானது முதல் பாசிடிவ் விமர்சனங்களை பெற்ற இப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் சக்கைப்போடு போட்டது. அதன்படி குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் அடுத்ததாக ‘தி டெல்லி ஃபைல்ஸ்’ என்கிற படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். 1984-ல் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைப் போல் இப்படம் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... KGF 2 : தியேட்டரில் சக்கைபோடு போடும் கே.ஜி.எஃப் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? - வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்

click me!