Alya Manasa | சீரியலிலுமா? ; ஆல்யாவுக்காக ராஜா ராணி குழு எடுத்த முக்கிய முடிவு!!

Kanmani P   | Asianet News
Published : Nov 28, 2021, 02:35 PM ISTUpdated : Nov 28, 2021, 02:47 PM IST
Alya Manasa | சீரியலிலுமா? ; ஆல்யாவுக்காக ராஜா ராணி குழு எடுத்த முக்கிய முடிவு!!

சுருக்கம்

Alya Manasa | "ராஜா ராணி" நாடகத்தில் சந்தியாவாக வரும் ஆல்யா மானசா கர்ப்பமாவது போன்ற கதை அமைப்பை உருவாக்க குழு முடிவு செய்துள்ளதாக மானசா தெரிவித்துள்ளார்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்ற தொடர் ராஜா ராணி. இதில் கதாநாயகியாக வந்து ரசிகர்களை கவர்ந்தவர் செம்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்த ஆலியா மானசா. விஜய் தொலைக்காட்சியில் இதுவரை ஒளிபரப்பான வரலாற்றில் வெற்றிகரமான சீரியல்களில் ராஜா ராணி சீரியலும் ஒன்று எனவும் கூறலாம். இந்த தொடரில் நடித்ததன் மூலம்  மூலம் இவருக்கு கிடைத்த பிரபலத்தை தொடர்ந்து பல விளம்பரங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.

ராஜா ராணி சீரியலில் நாயகனாக நடித்த சஞ்சீவை இவர் கடந்த 2019-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு 2020 மார்ச் மாதம் 20ல் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. சமீபத்தில் தனது குழந்தையின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுத்த புகைப்படத்தையும் இந்த தம்பதி பகிர்ந்துள்ளனர்.


 
தம்பதிகள் இருவரும் சீரியலில் பிஸியாக நடித்து வருகின்றனர். மானசா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2வில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சஞ்சீவி சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் நாடகத்தில் நடித்து வருகிறார்.

ராஜா ராணி நாடகம் டிஆர்பியில் நல்ல ரேட்டிங்கை பெற்று வருகிறது. போலீஸ் கனவுடன் தன கணவர் வீட்டில் அடக்கமாக இருக்கும் பெண்ணாக மானசா நடித்து வருகிறார். 

இதற்கிடையே மீண்டும் தங்களுக்கு குழந்தை பிறக்கவுள்ளதாக சஞ்சீவ் சமீபத்தில் தெரியப்படுத்தியிருந்தார். இதனால் மானசா நடக்கத்திலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவி வந்தது.

இந்த தகவலுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக ராஜா ராணி குழுவின் முடிவு குறித்து பேசியுள்ளார் மானசா . இது பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கர்ப்பமாக உள்ள தனக்கு ஏற்றபடி நாடக கதையை ராஜா ராணி குழு மாற்றியமைக்க உள்ளதாக மானசா தெரிவித்துள்ளார். எனவே ராஜா ராணி நாடகத்தில் சந்தியாவாக வரும் மானசா கர்ப்பமாவது போன்ற கதை அமைப்பை உருவாக்கவுள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025 ஆம் ஆண்டிற்கான டாப் 5 சிறந்த இயக்குனர்களின் பட்டியல்: First அண்ட் Last யார் தெரியுமா?
அஜித்தோடு மாப்பிள்ளை சார் சபரீசன்; சூடு வச்ச மாதிரி ஒரு கூட்டமே கதறுமே.? சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நக்கல்