“குட்டி பப்பு”வுக்கு பெயர் வச்சாச்சு... செல்ல மகளின் புகைப்படத்துடன் அறிவித்த ஆல்யா மானசா....!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 02, 2020, 10:42 AM IST
“குட்டி பப்பு”வுக்கு பெயர் வச்சாச்சு... செல்ல மகளின் புகைப்படத்துடன் அறிவித்த ஆல்யா மானசா....!

சுருக்கம்

இந்நிலையில் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலை ஆல்யா மானசா - சஞ்சீவ் தம்பதி வெளியிட்டுள்ளனர். 

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “ராஜா ராணி” என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா.  அந்த சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆல்யா அனைவரது மனைதையும் ஈசியாக கொள்ளையடித்தார். "குளிர் 100" படத்தில் ஹீரோவாக நடித்தவர் சஞ்சீவ். இவர் தான் "ராஜா, ராணி" தொடரில் ஹீரோவாக நடித்து வந்தார். இந்த தொடரில் நடிக்கும் போது காதல் வயப்பட்ட  ஆல்யா மானசா , சஞ்சீவ் ஜோடி வெற்றிகரமாக திருமணமும் செய்து கொண்டனர். 

இதையும் படிங்க: கழுத்துக்கு கீழே அசத்தல் டாட்டூ... ரசிகர்கள் பார்வைக்காக ரகசிய இடத்தை திறந்து காட்டிய டாப்சி...!

இளசுகளை கவர்ந்த இந்த ஜோடி மீண்டும் வேறு ஏதாவது சீரியலில் ஒன்றாக இணைவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த சமயத்தில், ஆல்யா மானசா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஆல்யா மானசாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகிய பெண் குழந்தை பிறந்திருப்பதாக அவரது கணவர் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இதையும் படிங்க: ஆபாசத்தின் உச்சம்.... சட்டையை மட்டும் அணிந்து கொண்டு படுகவர்ச்சி போஸ் கொடுத்த சீரியல் நடிகை....!

குட்டி ஆல்யாவின் முகத்தை பார்க்க வேண்டுமென ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். அதனால் தனது உள்ளங்கையில் குழந்தையின் பிஞ்சு கையை வைத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலை ஆல்யா மானசா - சஞ்சீவ் தம்பதி வெளியிட்டுள்ளனர். 

இதையும் படிங்க: இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் கிரண்... டாப் ஆங்கிளில் தொப்புளை காட்டி ஹாட் போஸ்...!

தங்களது செல்ல மகளுக்கு ஐலா சையத் என்று பெயர் வைத்திருப்பதாக ஆல்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஆல்யா, நான் தற்போது தாய்மையை அனுபவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அந்த புகைப்படம் வாழ்த்துக்கள் உடன் லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!