
ரசிகர்களின் (அன்பு) தொல்லையில் இருந்து தப்பிக்க அஜித் வீட்டிலேயே டப்பிங் தியோட்டர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இனி அவர் வெளியில் பார்ப்பது அறிதாகிவிடும் என்று கூறப்படுகிறது.
அஜித் என்றாலே கரும்பை சுற்றும் எரும்பாகி விடுகின்றனர் அவரது ரசிகர்கள், அந்தளவிற்கு அவர் எங்கு சென்றாலும் அங்கே ஏகப்பட்ட கூட்டம் கூடிவிடுகிறது. அப்படி அவர் எங்காவது ரகசியமாக சென்றுவர முயன்றாலும் கண்கொத்தி பாம்பாக இருந்து யாராவது ஒருவர் பார்த்து , அவருடன் செல்பி எடுத்து அதை சமூக வலைதளங்களில் வைரலாக்கி விடுகின்றனர். அவர் ஒரிடத்தில் இருப்பது தெரிந்தால் அங்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது, கூட்டத்தை கட்டுப் படுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர், போக்குவரத்து முடங்குகிறது. எனவே முடிந்த அளவிற்கு தமிழகத்தில் அவரின் படப்பிடிப்புகள் தவிர்க்கப்படுகிறது. ரசிகர்களின் கூட்டமே அதற்கு காரணம்.
தற்போது அவரது படங்கள் அனைத்துமே வெளிநாடுகளிலும் அல்லது இந்தியாவில் என்றால் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் அரங்குகள் அமைத்தும் வெளிப்புற படப்பிடிப்புகள் என்றால் ராஜமுந்திரியிலும் படமாக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்தால் தேவையில்லாமல் அஜித் வெளியில் தலை காட்டுவதில்லை, டப்பிங் பணிகளுக்காக மட்டுமே அவர் வெளியில் வருவாதை வழக்கமாக வைத்திருந்தார், அதுவும் இரவு நேரத்தில் மட்டும்தான்,
ஆனால் அதையும் ரசிகர்கள் மோப்பம் பிடித்து திரண்டுவிடுகின்றனர் எனவே இது போன்ற பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக தான் வசிக்கும் வீட்டிலேயே சொந்தமாக ஒரு டப்பிங் தியேட்டர் அமைத்து வருகிறார் அஜித். தற்போது அதன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதால், இனிமேல் அவர் படத்தின் டப்பிங் பணிகள் இங்கேயே நடக்கும் என தெரிகிறது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.