செஞ்சோற்றுகடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா @கவின் வஞ்சகன் பிக்பாஸடா...

Published : Sep 26, 2019, 04:10 PM ISTUpdated : Sep 26, 2019, 04:14 PM IST
செஞ்சோற்றுகடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா @கவின் வஞ்சகன் பிக்பாஸடா...

சுருக்கம்

5 லட்ச ரூபாயை வாங்கிக்கொண்டு பிக்பாஸ் இல்லத்தைவிட்டு இன்று கவின் வெளியேறும் நிகழ்வு மிகவும் சர்ச்சைக்குரிய டாபிக்காகியிருக்கிறது.  பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரேட்டிங்கிற்கு கவின் பலியாடாக்கப்படுவதாக அவரது விசுவாசிகள் தொடர்ந்து கதறி வருகிறார்கள்.இன்னும் சிலர் கவின் வெளியேறுவதாகக் காட்டப்படுவதாக நிகழ்ச்சியை சூடேற்றும் நாடகம்தான். இறுதிநாள் வரை அவர் நிகழ்ச்சியில் நீடித்திருப்பார் என்று பதிவிட்டு வருகிறார்கள்.  

கவின், லாஸ்லியாவின் காதலைக் கள்ளக்காதல் என்று கிண்டலடித்தவர்களே சற்று ஆடிப்போகும்படி கண் கலங்கும் செண்டிமெண்ட் காட்சிகளுடன் வந்திருக்கிறது சற்றுமுன் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரோமோ.

5 லட்ச ரூபாயை வாங்கிக்கொண்டு பிக்பாஸ் இல்லத்தைவிட்டு இன்று கவின் வெளியேறும் நிகழ்வு மிகவும் சர்ச்சைக்குரிய டாபிக்காகியிருக்கிறது.  பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரேட்டிங்கிற்கு கவின் பலியாடாக்கப்படுவதாக அவரது விசுவாசிகள் தொடர்ந்து கதறி வருகிறார்கள்.இன்னும் சிலர் கவின் வெளியேறுவதாகக் காட்டப்படுவதாக நிகழ்ச்சியை சூடேற்றும் நாடகம்தான். இறுதிநாள் வரை அவர் நிகழ்ச்சியில் நீடித்திருப்பார் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சில நிமிடங்களுக்கு முன்னர் வெளியான இன்றைய 95வது நாளின் இரண்டாவது புரோமோ வீடியோவில், இந்த ட்ரெயினை விட்டுவிட்டால் இனி வாழ்நாளில் அஜீத்தைப் பார்க்கமுடியாது என்று ’காதல் கோட்டை’ க்ளைமேக்ஸ் காட்சியில் ரயில்வே ஸ்டேஷனில் பதறி அழுதுகொண்டிருப்பாரே தேவயானி, அதுபோலவே அழுதுகொண்டிருக்கிறார் லாஸ்லியா. அவரைத் தேற்ற நினைக்கும் கவின் சுண்டு விரலைக் கொடுத்து லாஸின் விரலோடு கோர்த்துக்கொள்ள முயல முதலில் தவிர்க்குல் லாஸ் அடுத்து சேர்த்துக்கொள்கிறார். அடுத்து பின்னணியில் ‘போகாதே போகாதே... நீ பிரிந்தால் நான் இறப்பேன்’என்ற பாடல் ஒலிக்க கவின் பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறுகிறார். இல்லத்தின் கதவு மூடப்படும்போதும் கதவிடுக்கிலிருக்கும் கையை லாஸ்லியா எடுக்காமலிருக்க, கனகச்சிதமாக அந்த புரோமோ கட் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செவ்வாய்க் கிழமை 100 வது நிகழ்ச்சி முடிந்தபிறகு கவினும் லாஸ்லியாவும் நினைத்தால் ஒட்டிக்கலாம், கட்டிக்கலாம் தேவைப்பட்டால் அந்தக் காதல் புட்டுக்கலாம் என்கிற நிலையில் பிக்பாஸின் இந்த அழுகாச்சி டிராமாவுக்கும் கண்ணீர் வடிக்க ஒரு பெருங்கூட்டம் காத்திருப்பதுதான் ஆகப் பெருங்கொடுமை.

இரு கமெண்டுகள்...உறவுகளின் இழப்பின் போது நான் இதுபோல் அழவில்லை...நண்பர்களின் பிரிவின் போது நான் இதுபோல் அழவில்லை...

பெற்றோரை பிரிந்து வெளிநாட்டுக்கு செல்லும் போதும் நான் இதுபோல் அழவில்லை...ஆனால் #Kavin அண்ணா BB விட்டு போகும் போது மட்டும்...“எதுக்கு...!?”🤷‍♂️ 

...Replying to @vijaytelevision #செஞ்சோற்றுகடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயே 
#கவின் 🤢 வஞ்சகன் #பிக்பாஸ் 😂😂😂
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் வீட்டில் நாய் குறைக்க காரணம் என்ன? கண்ட்ரோல் பண்ண முடியாத பாரு, கம்ருதீன் செய்யும் சில்மிஷம்!
சிங்கத்த பார்த்து ஷாக் ரியாக்‌ஷன் கொடுத்த சந்திரகலா அண்ட் சாமுண்டீஸ்வரி: கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!