பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளுக்கு சவுக்கடி கொடுத்த பிரபல தயாரிப்பாளர்..!! படம் எடுக்க கற்றுத்தர வேண்டாம் என எச்சரிக்கை...!!

By Ezhilarasan BabuFirst Published Sep 26, 2019, 3:35 PM IST
Highlights

ஒரு திரைப்படம் எதை காண்பிக்க கூடாது என்பதையும் உறுதி செய்ய தணிக்கை குழு உள்ளது இது தவிர்த்து என்ன காண்பிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை அந்தத் திரைப்படத்தின் படைப்பாளிக்கே உள்ளது.

திரைப்படங்களை கண்காணிக்க தணிக்கை குழு என்று ஒன்று உள்ளபோது. இந்தந்த படம் எடுக்கலாம் இந்தந்த படத்தை எடுக்கக் கூடாது என்று தடைபோட அரசியல் இயக்கங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது என்று டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் காட்டமாக அறிக்கை விளியிட்டுள்ளது. 

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் திரு கார்த்திக் அவர்கள் நடிக்க பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் எங்களின் சுல்தான் திரைப்படம் என்ற உருவாகி வருகிறது இதன் படப்பிடிப்பு சென்னை, திண்டுக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது.  இதனிடையே இந்த திரைப்படம் திப்புசுல்தான் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படுவதாகவும்  அதனை திண்டுக்கல் மலைக்கோட்டையில் எடுக்க கூடாது எனவும் கூறி ஒரு சில இந்து அமைப்பினர் கடந்த 24 ஆம் தேதி அன்று படப்பிடிப்பு தளத்திற்கு அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது அவர்கள் வெளியிட்ட கருத்துக்களால் இருவேறு அமைப்புகளுக்கு இடையே கருத்து மோதல் ஏற்படும் சூழல் உருவாகி இருப்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும் இது வரலாற்று பின்னணியும் அல்லது திப்புசுல்தான் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படமோ அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம்  சமீப காலங்களாக சுய விளம்பர நோக்கில் திரைப்படங்களை தனிநபர்களும் சில அமைப்புகளும் தாக்குவது அதிகரித்துவருகிறது ஒரு திரைப்படம் எதை காண்பிக்க கூடாது என்பதையும் உறுதி செய்ய தணிக்கை குழு உள்ளது இது தவிர்த்து என்ன காண்பிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை அந்தத் திரைப்படத்தின் படைப்பாளிக்கே உள்ளது.

இது நம் நாட்டின்  சட்டம் நமக்கு அளிக்கும் சுதந்திரமும் பாதுகாப்பும் ஆகும். ஆகவே எந்த ஒரு அமைப்போ தனி நபரோ படைப்பாளிகளின் சுதந்திரத்தை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம் மேலும் வரலாற்று தலைவர்களுக்கும் தேசிய தலைவர்களுக்கும் சாதி மத அடையாளங்கள் பூசி அவர்களின் வாழ்வையும் நமது வரலாற்றையும் கொச்சைப்படுத்தும் செயல்களுக்கும் எங்களின் கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறோம் என்று  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

click me!