ஆகஸ்ட் 23 -ஆம் தேதி வெளியாக உள்ள சாலா படத்தின் ட்ரைலரை புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மது கடைக்காக மோதிக் கொள்ளும் இரண்டு பெரிய கேங்குகளை மையமாக வைத்து, வடசென்னை பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள 'சாலா' திரைப்படத்தின் டிரைலரை பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே மாதிரியான கதைகளை விரும்பாத திரையுலக ரசிகர்கள், வித்யாசமான களத்திலும், விறுவிறுப்பான கதையுடன் கூடிய படங்களை எதிர்பார்க்க துவங்கியுள்ளனர். அப்படி வித்தியாசமான கதைகளத்தோடு எடுக்கப்படும் படங்கள் மொழிதாண்டி ரசிகர்களை சென்றடைகிறது. சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களுக்கு கூட ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் 'கந்தாரா, மஞ்சுமல் பாய்ஸ், ஜெய்பீம், லவ்வர், லவ் டுடே, போன்ற படங்கள் அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.
இந்த வரிசையில் இதுவரை திரையுலகில் சொல்லப்படாத கோணத்தில், மது கடை ஒன்றை கைப்பற்ற மோதிக்கொள்ளும் இரண்டு கும்பம் பற்றிய கேங் ஸ்டார் படமாக... அதுவும் வடசென்னை பின்னணியோடு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் சாலா. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் டிரைலரை தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் வெளியிட உள்ளார்.
வயநாடு நிலச்சரிவால் கதறும் கேரள மக்களுக்கு ஓடி வந்து உதவிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்!
மணிப்பால் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தை, பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் விஷ்ணு பிரசாத் தயாரித்துள்ளனர். இந்த படத்தில் அறிமுக நடிகர் தீரன் ஹீரோவாக நடிக்க, ரேஷ்மா வெங்கடேசன் என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அருள்தாஸ், சம்பத் ராம், சால்ரஸ் வினோத், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆக்சன் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சென்சார் குழுவினர் யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.
தெலுங்கில் பல வெற்றி படங்களை தயாரித்துள்ள பீப்பிள் மீடியா ஃபேக்டரி முதல் முறையாக நேரடி தமிழ் படமாக சாலாவை தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலரை அல்லு அர்ஜுன் போன்ற டாப் ஸ்டார் வெளியிட உள்ளதால், படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.